*குழந்தைகள் மீதான வன்கொடுமைகளை குறைக்க ‘குட் டச்’ மற்றும் ‘பேட் டச்’ முறை குறித்த விழிப்புணர்வை பெற்றோர்கள் தங்களது குழந்தைகளுக்கு தவறாது வழங்கவேண்டும்.
*எது சரியான தொடுதல், எது தவறான தொடுதல் என்பது பற்றி வாரம் ஒரு முறையாவது குழந்தைகளிடம் பெற்றோர்கள் மற்றும் ஆசிரியர்கள் விளக்க வேண்டும்.
*ஒரு குழந்தையின் அனுமதி இல்லாமல் தொட யாருக்கும் உரிமை இல்லை. தனது உடலுக்கு தானே உரிமையாளர் என்பதை முதலில் குழந்தைகளுக்கு சொல்லிக்கொடுக்க வேண்டும்.
*குழந்தைகளை வன்கொடுமைகளுக்கு உள்ளாக்குபவர்களில் 90% அறிமுகமானவர்கள்தான். ஆகவே குழந்தைகள் தங்களிடம் சொல்வதை மற்றும் பேசுவதை ஒவ்வொரு பெற்றோரும் காது கொடுத்து கேட்க வேண்டும்.
*குழந்தைகளை கழுத்துக்குக் கீழே தொடுவதே தேவையற்ற தொடுதல்தான் என்பதை அவர்களுக்கு தெரியப்படுத்த வேண்டும். அப்படித் தொடுபவர்களை தைரியமாக எதிர்க்கவும் தங்களது குழந்தைகளை தயார் படுத்த வேண்டும்.
*கண், காது, மூக்கு என உறுப்புகளின் பெயரைச் சொல்லிக் கொடுக்கும் போதே பிறப்பு உறுப்புகளின் பெயர்களையும், அவற்றின் பயன்பாட்டையும் சொல்லிக் கொடுக்க வேண்டும். தனிப்பட்ட பகுதிகளைத் தொட முயற்சிப்பவரிடம் குழந்தைகள், ‘இது முறையற்றது தவறு’ என்று சொல்லி எதிர்ப்பதோடு, அதை வீட்டில் வந்து பெற்றோரிடம் சொல்லவும் குழந்தைகளை அறிவுறுத்த வேண்டும்.
*பள்ளிக்கு சென்று வந்த பின்னும், விளையாட வெளியே சென்று வந்த பின்னும் குழந்தையின் நடவடிக்கைகளில் ஏதேனும் மாற்றம் உள்ளனவா என்பதை கவனி்ப்பது மிகவும் அவசியமாகும். *குழந்தையின் குறைகளை மட்டும் சொல்லாமல் நிறைகளையும் சொல்லி அவர்களை ஊக்கப்படுத்தவேண்டும். அவர்களிடம் நல்ல நண்பர்களாக பழகவேண்டும் அப்போதுதான் வெளிப்படையாக அச்சமின்றி பேசுவார்கள்.
*சந்தேகம் எழும் பட்சத்தில் குழந்தைகள் அச்சமடையாதபடி பொறுமையாக கேட்டறிதல் வேண்டும்.
*எளிதில் பயப்படுபவர்களாக அல்லாமல் தைரியமானவர்களாக குழந்தைகளை வளர்க்க வேண்டும். தைரியம் பாராட்டுக்கு உரியது என்பதை பெற்றோர்கள் புரியவைக்க வேண்டும்
*பதட்டம் அல்லது சோகமாகக் குழந்தைகள் காணப்பட்டாலோ, உடலில் ஏதேனும் காயம் அல்லது தழும்பு காணப்பட்டாலோ குழந்தையிடம் அன்பாக பேசி அதற்கான காரணத்தை உடனுக்குடன் அறிவது மிகமிக அவசியம்.
செய்தி வி காளமேகம் மதுரை மாவட்டம்




You must be logged in to post a comment.