மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே தொட்டப்பநாயக்கணூரைச் சேர்ந்தவர் சிங்கம்(40). இவரது மனைவி அமுதா (38). இவர்களுக்கு பாலாஜி (15) என்ற மகன்உள்ளார். இவர் உசிலம்பட்டியில் உள்ள நாடார் சரஸ்வதி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி என்ற தனியார் பள்ளியில் 10ம் வகுப்பு படித்து வருகிறார்.இந்நிலையில் கணித பாடம் நடத்தும் ரவி என்ற ஆசிரியர் தினமும் பாலாஜியை வெறுப்பாகவே பார்ப்பதாகவும், கணக்கு பாடத்தில் உள்ள வீட்டுபாடத்தை சரிவர செய்து வந்தாலும் அவனை துன்பறுத்தி அடிப்பதாகவும் சொல்லப்படுகிறது.
மேலும் கணித அசிரியர் தனியாக டியூசன் சென்டர் வைத்துள்ளதாகவும், பாலாஜி; கடந்த வருடம் 9ம் வகுப்பு படிக்கும் போது அவருடைய டியூசன் சென்டரில் டியூசன் படிதத்தாகவும், பின்னர் 10ம் வகுப்புக்கு வந்தவுடன் அவருடைய டியூசன் சென்டருக்கு செல்லாமல் வேற டியூசன் சென்டருக்கு சென்று படித்து வருவதாகவும் தெரிகிறது, இதனால் பாலாஜி மீது ஆசிரியர் ரவி கோபத்தில் இருந்ததாகவும் பாலாஜியை அடிக்கடி ஏதேனும் காரணத்தைக் கூறி அடித்ததாகவும் கூறப்படுகிறது. இது குறித்து மாணவன் பாலாஜி தங்களது பெற்றோர்களிடம் கதறி அழுததாக தெரிகிறது. ஆனால் பெற்றோர்கள் பாலாஜியை சமாதானபடுத்தி பள்ளிக்கு அனுப்பிவைத்தனர். இந்த நிகழ்வு கடந்த 6 மாதங்களாவே பள்ளியில் அரங்கேறி வந்துள்ளது. இந்நிலையில் பள்ளி மாணவன் பாலாஜி வழக்கம் போல் பள்ளிக்கு வந்தள்ளான்.
கணித பாடவேளையில் ஆசிரியர் ரவி வகுப்பறைக்கு வந்ததும் பாலாஜியை கோபத்துடன் திட்டியதாக சொல்லப்படுகிறது. இந்நிலையில் ஆசிரியர் திட்டியதால் மனமுடைந்த பாலாஜி சனிக்கிழமை பள்ளி முடிந்ததும் வீட்டுக்கு சென்றுள்ளான். ஆனால் யாரிடமும் பேசாமல் இருந்தாகவும், மறுநாள் ஞாயிற்றுகிழமை பெற்றோர்கள் தோட்டத்திற்கு சென்றுள்ள நிலையில் தனியாக இருந்த பாலாஜி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.சம்பவமறிந்த உசிலம்பட்டி தாலுகா போலிசார் பாலாஜியின் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக உசிலம்பட்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
பின்னர் பாலாஜியின் பெற்றோர் அவனது பையை சோதனை செய்ததில் கடிதம் எழுதி வைத்து விட்டு தற்கொலை செய்தது தெரிய வந்ததது.அக்கடிதத்தில் தன்னுடைய சாவுக்கு ஆசிரியர் ரவிதான் காரணமென்றும் அவன் கொடுமை தாங்காமல் இம்முடிவை எடுத்ததாகவும் அவனுக்கு தண்டனை வாங்கித்தர வேண்டுமென்றும் அனைவருக்கும் இறுதி வணக்கம் என எழுதியுள்ளான்.இக்கடிதத்தை கைப்பற்றிய போலிசார் விசாரணை செய்து வருகின்றனர்.மாணவர்களை நல்வழிப்படுத்த வேண்டிய ஆசிரியரே மாணவனின் இறுதிக்கு காரணமாக இருந்துள்ளது மிகவும் வேதனையான விஷயம்.
உசிலை சிந்தனியா



You must be logged in to post a comment.