17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » 24 மணி நேரமும் ஒளிரும் உயர் கோபுர மின் விளக்கு

24 மணி நேரமும் ஒளிரும் உயர் கோபுர மின் விளக்கு

எழுதியவர்: mohan December 3, 2019, 4:28 pm

பெரம்பலூர் மாவட்டம் , குன்னம் காவல் நிலையம் முன்பு உயர் கோபுர மின் விளக்கு ஒன்று உள்ளது. கடந்த ஒரு மாதமாக மின் விளக்கு அணையாமல் பகலிலும் இரவிலும் ஒளிர்ந்து கொண்டே இருப்பதாக இப்பகுதி சமூக ஆர்வலர் வெண்மணி வரதராஜன் தெரிவித்துள்ளார்.மேலும் அவர் இது பற்றி கூறுகையில் ஒருபுறம் மின்சார சிக்கனம் தேவை இக்கணம் என மின்சாரத்துறை விளம்பரப்படுத்தி வருகிறது. மறுபுறம் அணையாத விளக்காக மாறி 24 மணி நேரமும் உயர்கோபுர மின் விளக்கு ஒளிர்ந்து கொண்டே இருக்கிறது. இதனால் மின்சாரம் தேவையின்றி வீண் விரயம் ஆகி கொண்டிருக்கிறது.சம்பந்தப்பட்ட துறையினர் உடனடியாக நடவடிக்கை எடுத்து பகலில் ஒளிராமல் இரவில் மட்டும் ஒளிரும் செயல்பாட்டுக்கு கொண்டு வருமாறு பொதுநலன் கருதி மக்கள் பாதை அமைப்பின் சார்பில் சமூக ஆர்வலர் வெண்மணி வரதராஜன் கோரிக்கை விடுத்துள்ளார்.

செய்தியாளர் அபுபக்கர்சித்திக்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!