திருவண்ணாமலை மாவட்டம் செங்கத்தில் உள்ள செந்தமிழ் நகரில் மூடப்படாத பாழடைந்த கிணறு ஒன்றில் கன்று குட்டி தவறி விழுந்தது, இதனை கண்ட பொதுமக்கள் கன்று குட்டியை கயிறுகள் மூலம் மேலே தூக்க முயற்சி செய்தார்கள், கிணற்றின் ஆழம்
அதிகமாக இருந்ததனால் கன்று குட்டியை அவர்களால் கிணற்றிலிருந்து தூக்க முடியவில்லை. அதனால் செங்கம் தீயணைப்பு துறைக்கு கைப்பேசி வாயிலாக அழைப்பு விடுத்தனர், இதனைத்தொடர்ந்து சம்பவ இடத்திற்கு உடனடியாக தீயணைப்புத் துறையினர் வந்து கிணற்றில் இறங்கி கயிறுகளால் கன்றுக்குட்டியை இறுகக் கட்டி காயங்கள் ஏற்படாதவாறு உயிருடன் மீட்டெடுத்தனர், கன்று குட்டியை திறம்பட செயல்பட்டு உயிருடன் மீட்டு எடுத்த தீ அணைப்பு துறையினரை பொதுமக்களும் விலங்கின ஆர்வலர்களும் பாராட்டினர்.
செங்கத்தில் கிணற்றில் தவறிவிழுந்த கன்று குட்டியை உயிருடன் மீட்டெடுத்த தீயணைப்பு துறை.
எழுதியவர்: mohan December 1, 2019, 3:48 pm




You must be logged in to post a comment.