இராமநாதபுரம் மாவட்டத்தில் கடந்த இரண்டு நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இதனால் 2 குடிசை வீடுகள் உள்பட 29 வீடுகள்
சேதமடைந்தன. இராமநாதபுரம், கீழக்கரை வட்டங்களில் தலா 7, திருவாடானை வட்டத்தில் 5, கடலாடி வட்டத்தில் 4, பரமக்குடி, முதுகுளத்தூர் வட்டங்களில் தலா 1 என 25 ஓட்டு வீடுகள் பகுதி அளவில் சேதமடைந்தன. திருவாடானை வட்டத்தில் ஒரு ஓட்டு வீடு முழுவதும் சேதமடைந்தது. கடலாடி வட்டத்தில் ஒரு குடிசை வீடு முழுவதும், 2 குடிசை வீடுகள் பகுதி அளவிலும் சேதமடைந்துள்ளது. இன்று காலை காலை 8 மணி நிலவரப்படி மாவட்டத்தில் பதிவான அளவு (மி.மீட்டரில்) இராமநாதபுரம் 110,இராமேஸ்வரம் 100.20,தங்கச்சிமடம் 80.50, பாம்பன் 54.40, மண்டபம் 53.20,பரமக்குடி 21,கமுதி 28.60, முதுகுளத்தூர் 24.20பள்ளமோர்குளம் 24,ஆர்.எஸ்.மங்கலம்22, திருவாடானை 38.80,தொண்டி 27.50,வட்டாணம் 74.40,கடலாடி 69தீர்த்தாண்டதானம்41,வட்டாணம் 35அடுத்த இரண்டு நாட்கள் மழை தொடரும் என சென்னை வானிலை மையம் அறிவித்துள்ளதால் மீனவர்கள் கடலுக்குச் செல்லவில்லை
இராமநாதபுரம் மாவட்டத்தில் தொடரும் கன மழை. 29 வீடுகள் சேதம்..
எழுதியவர்: mohan December 1, 2019, 10:12 am




You must be logged in to post a comment.