மதுரை மாவட்டம் உசிலம்பட்டி கவுண்டன்பட்டி ரோட்டில் உள்ள நாடார் சரஸ்வதி மேல்நிலைப் பள்ளியில் இலவச
மடிக்கணிணிகள் வழங்கும் விழா நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்ட உசிலம்பட்டி அதிமுக சட்டமன்ற உறுப்பினர் பா.நீதிபதி 2017 – 18ம் ஆண்டில் 12ம் வகுப்பில் கல்வி பயின்ற 234 மாணவர்களுக்கு தமிழக அரசால் வழங்கப்படும் விலையில்லா இலவச மடிக்கணிணிகளை வழங்கினார். மேலும் இந்நிகழ்ச்சியில் பள்ளி தலைமையாசிரியர் ரேச்சல், உதவி தலைமையாசிரியர் பரமசிவம், மற்றும் அதிமுக நகரசெயலாளர் பூமாராஜா, மற்றும் அதிமுக நிர்வாகிகள், தொண்டர்கள், பள்ளி ஆசிரியர்கள், மாணவர்கள் பலர் கலந்து கொண்டனர்.
உசிலம்பட்டி நாடார் சரஸ்வதி மேல்நிலைப்பள்ளியில் மாணவர்களுக்கு சட்டமன்ற உறுப்பினர் பா.நீதிபதி இலவச மடிக்கணிணிகளை வழங்கினார்.
எழுதியவர்: mohan November 30, 2019, 12:02 pm




You must be logged in to post a comment.