திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் பகுதியில் கஞ்சா விற்பனை செய்வதாக கிடைத்த ரகசிய தகவலை அடுத்து
ஒட்டன்சத்திரம் காவல் நிலைய சார்பு ஆய்வாளர் விஜய் தலைமையில் போலீசார் சரவணா பேக்கரி அருகே உள்ள வீட்டில் சோதனை செய்தனர்.அப்போது அங்கு ஒரு வீட்டில் திருப்பூரைச் சேர்ந்த முத்துலட்சுமி ( 48) சட்டவிரோதமாக 4.400 கிலோ கிராம் எடையுள்ள கஞ்சாவை பதுக்கி வைத்திருப்பது தெரியவந்தது, இதனையடுத்து அவரை கைது செய்து காவல் நிலையம் அழைத்து சென்று வழக்கு பதிவு செய்யபட்டு நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி மதுரை மத்திய சிறையில் அடைத்தனர்.
வீட்டில் கஞ்சாவை பதுக்கி வைத்திருந்த பெண்ணை கைது செய்த திண்டுக்கல் போலீசார்.
எழுதியவர்: mohan November 30, 2019, 10:24 am




You must be logged in to post a comment.