18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » கொலை வழக்கில் ஈடுபட்ட ஆறு நபர்கள் கைது

கொலை வழக்கில் ஈடுபட்ட ஆறு நபர்கள் கைது

எழுதியவர்: mohan November 29, 2019, 7:37 pm

கடந்த 20.11.2019 ம் தேதி மதுரை மாநகர் மேல அனுப்பானடி TNHB காலனியில் வைத்து  சந்திரசேகரன்  மகன் ரமேஷ்  30 என்பவரை சிலர் கொலை செய்ததால் அவனியாபுரம் காவல் நிலையத்தில் கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டு காவல் ஆய்வாளர் ரமணி  இவ்வழக்கை புலன்விசாரணை செய்தார். மதுரை மாநகர காவல் ஆணையர் டேவிட்சன் தேவாசீர்வாதம் இவ்வழக்கில் தொடர்புடைய நபர்களை விரைவில் கைது செய்ய காவல் ஆய்வாளருக்கு உத்தரவிட்டார். காவல் ஆய்வாளர் ரமணி தலைமையில் தனிப்படை அமைத்து கொலை வழக்கில் ஈடுபட்ட நபர்களை தேடிவந்தனர். கொலை வழக்கில் ஈடுபட்ட நபர்களான இராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் தாலுகாவைச் சேர்ந்த ராமையாமகன் முருகன் @ மாங்குடி முருகன் 41 இராமநாதபுரம் மாவட்டம், வ.உ.சி நகரைச் சேர்ந்த மாரிமுத்துவின் மகன் போஸ் 58, மதுரை வில்லாபுரம் மணிகண்டன் நகரைச் சேர்ந்த மூக்கையாதேவர் மகன் சுப்பையா 56 ஆகிய மூன்று நபர்களையும் கடந்த 22.11.2019 ம் தேதியும், மதுரை மேல அனுப்பானடி, TNHB காலனியைச் சேர்ந்த முனியசாமியின் மகன் திருப்பதி 31/19 என்பவர் 23.11.2019 -ம் தேதியும், மதுரை சிந்தாமணி ரோடு, சூசையப்பர்புரத்தைச் சேர்ந்த அழகர்சாமியின் மகன் சரவணகுமார் @ சுனாமி சரவணன் 27/19, மதுரை செல்லூரைச் சேர்ந்த முருகன் மகன் பிரசாந்த் 26/19 ஆகிய இருவரும் 25.11.2019-ம் தேதியும் தனிப்படையினரால் கண்டுபிடிக்கப்பட்டு காவல் ஆய்வாளர்  ஆறு நபர்களையும் கைது செய்து அவர்களிடமிருந்து இரண்டு இரு சக்கர வாகனங்கள் மற்றும் நான்கு வாள்களை கைப்பற்றி நீதிமன்ற காவலுக்கு அனுப்பினார். காவல் ஆணையர் அவர்கள் தனிப்படையினரை பாராட்டினார்.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!