18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » 15 வயது சிறுமியை திருமணம் செய்வதாக ஆசைவார்த்தை கூறி கடத்திச் சென்ற நபரை போக்சோ சட்டத்தில் கைது செய்த திண்டுக்கல் போலீசார்

15 வயது சிறுமியை திருமணம் செய்வதாக ஆசைவார்த்தை கூறி கடத்திச் சென்ற நபரை போக்சோ சட்டத்தில் கைது செய்த திண்டுக்கல் போலீசார்

எழுதியவர்: mohan November 29, 2019, 7:27 pm

திண்டுக்கல் மாவட்டம் பாரதிபுரம் பகுதியை சேர்ந்த 15 வயது சிறுமியை அதே பகுதியை சேர்ந்த உதயகுமார் (21) என்பவர் திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி கடத்திச் சென்றதாக கூறப்படுகிறது.இதுகுறித்து சிறுமியின் தாயார் திண்டுக்கல் நகர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். புகாரின் பேரில் காவல் நிலைய ஆய்வாளர் அமுதா வழக்குப்பதிவு செய்து உதயகுமாரை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர் செய்து சிறையில் அடைத்தனர்.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!