18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » நெல்லையில் வாக்களிக்கும் முறை பற்றிய விழிப்புணர்வு நிகழ்ச்சி-பள்ளி மாணவ மாணவிகள் ஆர்வத்துடன் பங்கேற்பு

நெல்லையில் வாக்களிக்கும் முறை பற்றிய விழிப்புணர்வு நிகழ்ச்சி-பள்ளி மாணவ மாணவிகள் ஆர்வத்துடன் பங்கேற்பு

எழுதியவர்: mohan November 29, 2019, 7:05 pm

நெல்லை மாவட்டம் பேட்டை காமராஜர் நகர்மன்ற மேனிலைப்பள்ளியில் திறன் வளர்ப்பு பயிற்சி மற்றும் அரசியல் சாசன கொண்டாட்ட தினம் நடைபெற்றது.இந்நிகழ்வில் முதுகலை பொருளாதார ஆசிரியர் திரு. பொன்னுசாமி அவர்கள் வரவேற்புரை ஆற்றினார். திறன் வளர்ப்பு பயிற்சியை மனோதத்துவ நிபுணர்திரு. ராம்குமார் சேதுபதி அவர்கள் கலந்து கொண்டு மாணவர்களுக்கு பயிற்சிகள் மற்றும் பரிசுகளை வழங்கினார். மாணவர்களுக்கு மாதிரி வாக்குப்பதிவு மையம் அமைக்கப்பட்டு வாக்களிக்கும் முறைகள் குறித்து விளக்கப்பட்டது.

அரசியல் சாசனம் தினத்தை முன்னிட்டு கட்டுரை போட்டி, பேச்சு போட்டி, ஓவிய போட்டி நடத்தப்பட்டு மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. பின்னர் நூறு சதவிகித வாக்குப்பதிவை வலியுறுத்தி மாணவர்கள் கலந்து கொண்ட விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. நிகழ்ச்சிக்கான அனைத்து ஏற்பாடுகளையும் பள்ளியின் தலைமை ஆசிரியர் திருமதி. மர்பி இஸ்ரேல்,ஆசிரியர்கள் கதிர் வள்ளிஅம்மாள், ஜெப ஜான்சன், சாந்தி, செய்யது ராபியத்,சீதாராமன், குருசாமி,மாரியம்மாள், சிவகாமி, ஆகியோர் சிறப்பாக செய்திருந்தனர். விழாவின் இறுதியில் ஆங்கில ஆசிரியர் சாமுவேல் நன்றி கூறினார்.

செய்தியாளர் அபுபக்கர்சித்திக்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!