18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » போக்குவரத்துக்கு இடையூறாக பயன்பாடு  இல்லாத தண்ணீர் தொட்டி இடிக்க  வேண்டும்.பொதுமக்கள் கோரிக்கை

போக்குவரத்துக்கு இடையூறாக பயன்பாடு  இல்லாத தண்ணீர் தொட்டி இடிக்க  வேண்டும்.பொதுமக்கள் கோரிக்கை

எழுதியவர்: mohan November 29, 2019, 6:41 pm

திண்டுக்கல் மாவட்டம்  நிலக்கோட்டை பேரூராட்சி 14வது வார்டு பகுதியில் பெருமாள் கோயில், மாரியம்மன் கோவில் மக்கள் குடியிருக்கும் கூடிய பகுதியாக விளங்கக்கூடிய பகுதியாக உள்ள பகுதியில் சுமார் ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகிறார்கள்.  இந்த வார்டு பகுதியில் வசிக்கக்கூடிய பெரும்பாலான மக்கள் விவசாய மற்றும் தொழில் சார்ந்த பணிகளை செய்து வருகிறார்கள் இவர்கள் தினந்தோறும் வேலைக்குச் செல்ல வேண்டிய நிலையில் இருப்பதால் இந்த பெருமாள் கோயில் தெரு பகுதியை தினந்தோறும் பயன்படுத்தி வருகிறார்கள்.      அப்படி தினந்தோறும் பயன்படுத்தும் பகுதியில் நடுப்பகுதியில் பயன்பாடு இல்லாத ஒரு பழுதடைந்த நிலையில் ஒரு குடிநீர் தொட்டி சுமார் 40 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்டது உள்ளது. இதனால் இந்தப் பகுதியில் போக்குவரத்து அடிக்கடி பாதிப்பு ஏற்பட்டு வருகிறது.    எனவே உடனடியாக இந்த பயன்பாடு இல்லாத பழுதடைந்த நிலையில் உள்ள இந்த குடிநீர் தொட்டியை அகற்ற வேண்டும் என பொதுமக்கள் பல ஆண்டுகளாக கோரிக்கை விடுத்தும் நிறைவேறாத நிலையில் உள்ளது. ஆகவே இதை மாவட்ட நிர்வாகம் உடனடியாக நேரில் ஆய்வு செய்து இந்த பயன்பாடு இல்லாத குடிநீர் தொட்டி அகற்ற நடவடிக்கை எடுத்து மட்டும் சாலை சீரமைக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளார்.  தமாக உயர்மட்ட அதிகாரிகள் மற்றும் முதலமைச்சர் உள்ளிட்ட பல்வேறு அதிகாரிகளுக்கு கோரிக்கை விடுத்த வண்ணம் இருப்பினும் இதுவரை நடவடிக்கை எடுக்கப்படவில்லை என இந்த பொதுமக்கள் தெரிவித்திருக்கிறார்கள். ஆகவே உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் எதிர்பார்ப்பில் உள்ளார்கள்.

நிலக்கோட்டை தாலுகா செய்தியாளர் ம.ராஜா

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!