18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » உயிர்பழி வாங்க காத்திருக்கும் தரையில் தொங்கும் மின் வயர்கள். கண்டுகொள்ளாத அவலம்

உயிர்பழி வாங்க காத்திருக்கும் தரையில் தொங்கும் மின் வயர்கள். கண்டுகொள்ளாத அவலம்

எழுதியவர்: mohan November 29, 2019, 6:27 pm

திண்டுக்கல் மாவட்டம், நிலக்கோட்டை ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட சித்தர்கள்நத்தம் ஊராட்சியில் சித்தர்கள் நத்தம் கிராமத்தில் சுமார் இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் வாழ்ந்து வருகிறார்கள்.இக்கிராம மக்கள் விவசாயத்திற்கும் மற்றும் யாராவது இறந்தால் உடலைப்  சாலையில்  இருந்து சுடுகாட்டு செல்கிறார்கள். மேலும் இந்தச் சாலை வழியாக பொதுமக்கள் , பள்ளி மாணவர்கள், அதிகம் பயன்படுத்தும் ஆனா பட்டிக்கு செல்லும் குறுகிய வழியாக இந்த பாதையை பயன்படுத்தி வருகிறார்கள். இந்நிலையில் கடந்த பல மாதங்களாக மின் வயர்கள் சாலையோரத்தில் மிகவும் தாழ்வாக  தரையில் உரசும் வண்ணம் சிறு குழந்தைகள் கூட தொடும் அளவிற்கு கீழே தொங்குவதால் இதனை இப்பகுதி பொதுமக்கள் பலர் மின்சார வாரிய அலுவலர்களிடமும் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்திலும் புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை என கூறுகின்றனர் . இதனால் இப்பகுதியில் உள்ள மேய்ச்சலுக்கு செல்லும் ஆடுகள் மாடுகள் மற்றும் பள்ளிக்குச் செல்லும் சிறு குழந்தைகள் கூலி வேலைக்குச் செல்லும் விவசாயிகள் பாதிக்கப்பட்டு உயிர்வழி வாங்கும் முன் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைக்கின்றனர்.

நிலக்கோட்டை தாலுகா செய்தியாளர் ம.ராஜா

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!