17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » உள்ளாட்சி தேர்தலில் அதிமுக தலைமையிலான கூட்டணி அமோக வெற்றி பெறும் பாமக மாநில தலைவர் ஜி.கே.மணி பேச்சு

உள்ளாட்சி தேர்தலில் அதிமுக தலைமையிலான கூட்டணி அமோக வெற்றி பெறும் பாமக மாநில தலைவர் ஜி.கே.மணி பேச்சு

எழுதியவர்: mohan November 29, 2019, 6:19 pm

திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் அடுத்த ஹவுசிங்போர்டுயில் உள்ள தனியார் மண்டபத்தில் பாட்டாளி மக்கள் கட்சியின் சார்பில் மாநில பொதுச்செயலாளர் டி.கே.ராஜா தலைமையில் திருப்பத்தூர் மாவட்டத்திற்கான மாவட்ட பொதுக்குழு கூட்டம் நடைப்பெற்றது.இந்த பொது கூட்டத்தில் அக்கட்சியின் மாநில தலைவர் ஜி.கே.மணி சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு உள்ளாட்சி தேர்தல் மகளிர் மாநாடு மற்றும் திருச்சியில் நடைபெறும் மாநாடு குறித்து பேசினார் அப்போது செய்தியாளர்களின் சந்திப்பின் போது தமிழகத்தில் நடைபெறுகின்ற உள்ளாட்சி தேர்தலில் அதிமுக கட்சியுடன் பாமக கட்சி கூட்டணி தொடரும்.மேலும் அதிமுக தலைமையிலான கூட்டணி பலமான கூட்டணி வெற்றி கூட்டணி உள்ளாட்சி தேர்தலில் அனைத்து இடங்களிலும் வெற்றி பெறும் இதற்கு சான்று கடந்த விக்கிரவாண்டி மற்றும் நாங்குநேரி தொகுதிக்கான நடைபெற்ற இடைத்தேர்தலின் வெற்றி ஆகும்.வேலூர் மாவட்டத்தை மூன்றாக பிரித்து திருப்பத்தூர் ராணிப்பேட்டை மற்றும் வேலூர் என மாவட்ட பொதுமக்களின் நலன்கருதி உடனடியாக செயல்படுத்திய தமிழக முதல்வர் எடப்பாடி.பழனிச்சாமிக்கு பாட்டாளி மக்கள் கட்சியின் சார்பில் பாராட்டுக்களை தெரிவித்தார்…..

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!