தமிழ்நாடு சுற்றுச்சூழல் துறை, மாசுக்கட்டுப்பாட்டு வாரியம், பள்ளிக்கல்வி துறை, தேசிய பசுமைப்படை சார் பில் பிளாஸ்டிக் மாசில்லா தமிழ்நாடு பயிற்சி முகாம் ராமநாதபுரம் முகமது சதக் தஸ்தகீர் கல்வியியல் கல்லூரியில் நடைபெற்றது. முதன்மைக் கல்வி அலுவலர் அ.புகழேந்தி தலைமை வகித்தார். மாவட்டச் சுற்றுச்சூழல் பொறியாளர் டி.கண்ணன் பயிற்சி முகாமை துவக்கி வைத்தார். தேசிய பசுமைப்படை ராமநாதபுரம் கல்வி மாவட்ட ஒருங்கிணைப்பாளர் பெர்னாடிட் வரவேற்றார். ராமநாதபுரம் வர்த்தக சங்கத் தலைவர் பா.ஜெகதீசன், முகமது சதக் தஸ்தகீர் கல்வியியல் கல்லூரி முதல்வர் எஸ்.சோமசுந்தரம், முகமது சதக் தஸ்தகீர் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி முதல்வர் எஸ்.நந்தகோபால், மாவட்டச் சுற்றுச்சூழல் அலுவலர் எஸ்.விஜயகுமார் ஆகியோர் பேசினர்.
கடல்வாழ் உயிரினங்களுக்கு பிளாஸ்டிக் பைகளால் ஏற்படும் தீமைகள், கடல்வாழ் உயிரினங்கள் பாதுகாப்பு குறித்து ராமநாதபுரம் வனச்சரக அலுவலர் எஸ்.சதீஷ், பிளாஸ்டிக் பொருட்கள் மாற்றுப் பொருட்கள் பயன்பாடு குறித்து தேசிய பசுமைப்படை பரமக்குடி கல்வி மாவட்ட ஒருங்கிணைப்பாளர் பா.தீனதயாளன் ஆகியோர் கருத்துரை வழங்கினர். தடைசெய்யப்படாத பிளாஸ்டிக் பொருட்களின் கழிவுகளை மறுபயன்பாடு: மறுசுழற்சி முறை கண்காட்சியில் பாரதி கல்வி அறிவியல் அறக்கட்டளை இயக்குநர் எம்.ராமமூர்த்தி விளக்கம் அளித்தார்.பிளாஸ்டிக் விழிப்புணர்வு கலைநிகழ்ச்சி நடைபெற்றது. ராமநாதபுரம் வள்ளல் பாரி பள்ளி தலைமை ஆசிரியை எஸ்தர் வேணி தொகுத்து வழங்கினார். தேசிய பசுமைப்படை ஆர்.எஸ்.மங்கலம் ஒன்றிய ஒருங்கிணைப்பாளர் கருணாகரன் நன்றி கூறினார். நிகழ்வில் பங்கேற்றோருக்கு துணிப்பை வழங்கப்பட்டது.







You must be logged in to post a comment.