மதுரை மாவட்டம் உசிலம்பட்டி கவுன்டன்பட்டி ரோட்டில் உள்ள அரசு உதவி பெறும் பள்ளியான நாடார் சரஸ்வதி தொடக்கப் பள்ளியில் சுமார் 800க்கும் மேற்பட்ட மாணவர்கள் பயின்று
வருகின்றனர். இந்நிலையில் இந்த பள்ளி மாணவர்களுக்கு மதியம் வழங்கப்படும் சத்துணவை செய்து தருவதற்கு போதிய சத்துணவு அறை இல்லாததால் உசிலம்பட்டி சட்டமன்ற உறுப்பினர் பா.நீதிபதியிடம் புதிய சத்துணவு அறை கட்டிதரகோரி பள்ளிதலைமையாசிரியர் மதன்பிரபு கோரிக்கை மனுவை வழங்கினார். மனுவை பெற்ற சட்டமன்ற உறுப்பினர் விரைவில் புதிய சத்துணவு அறை கட்டிதர நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தார்.
உசிலம்பட்டி நாடார் சரஸ்வதி தொடக்கப் பள்ளிக்கு புதிய சத்துணவு அறை கேட்டு சட்டமன்ற உறுப்பினரிடம் கோரிக்கை மனு
எழுதியவர்: mohan November 29, 2019, 3:52 pm




You must be logged in to post a comment.