மதுரை மாவட்டத்தில் சமீப காலமாக 100 ரூபாய் 200 ரூபாய் மற்றும் 500 2000 கள்ள நோட்டுகள் அதிக அளவில் புழக்கத்தில்
உள்ளது. இதனால் சிறு வியாபாரிகள் பெரியவர்கள் வரை மிகப் பெரிய பாதிப்புகள் ஏற்படுகிறது. இது போன்று தொடர்ந்து கள்ள நோட்டுகள் அதிக அளவில் புழக்கத்தில் வருவதற்கு பெரும் நஷ்டம் ஏற்படுவதாக வங்கியில் செலுத்தும் பொழுது கள்ளநோட்டை உடனடியாக கிழித்து விடுகிறார்கள். இதனால் எங்களுக்கு பொருளாதார இழப்புகள் ஏற்படுவதாக வியாபாரிகள் குற்றம் சாட்டுகிறார்கள். மேலும் வங்கி நிர்வாகம் கள்ள நோட்டை கண்டறிவது குறித்து ஆங்காங்கே ஒரு விழிப்புணர்வு நிகழ்ச்சியும் விழிப்புணர்வு பதாகைகள் வைக்க வேண்டும் என வியாபாரிகள் கோரிக்கை விடுக்கின்றனர். வியாபாரிகளிடம் கள்ள நோட்டு பற்றிய விளம்பர நோட்டீசை கொடுக்க வேண்டுமெனவும் காவல்துறை கள்ள நோட்டு கும்பல் விரைந்து பிடித்து கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் வியாபாரிகளும் சமூக ஆர்வலர் கோரிக்கை விடுக்கின்றனர். மேலும் சமீபத்தில் மதுரை ரயில் நிலையத்தில் சுமார் 7 லட்சம் மதிப்புள்ள 2000 ரூபாய் கள்ளநோட்டு எப்படிப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது .
செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்




You must be logged in to post a comment.