புகைப்பிடிப்பது உடலுக்கு தீங்கு விளைவிக்கும். ஆனாலும் அரசே புகையிலை பொருட்களை விற்பனை செய்ய அனுமதி கொடுத்துள்ளது.இந்த அனுமதியால் கோடிக்கணக்கானோர் புற்று நோயால் இறக்கும் நிலை உருவாகி உள்ளது.புகையிலை பொருளால் வரும் லாபம் ஒருபுறம், கேன்சர் சிகிச்சையினால்
வரும் லாபம் மறுபுறம் என லாப நோக்கில் தொழில்கள் வளர்ச்சி அடைந்து வருவதாகவும் பொது மக்கள் மத்தியில் கருத்து நிலவி வருகிறது.இந்நிலையில் ஒரு தலை முறையை சீரழித்தது போதாதென்று, அடுத்த தலைமுறையையும் சீரழித்து தங்களது விற்பனையை பெருக்குவதில் புகையிலை நிறுவனங்கள் கடும் ஆர்வம் காட்டி வருவதாகவும் குற்றம் சாட்டுகள் எழுந்துள்ளது. இதற்காக பள்ளி அருகில் இருக்கும் பெட்டி கடைகளில், சிகரெட்டுகள்,புகையிலைபொருட்கள் விலை குறைவாக விற்கப்படுவதாகவும் பொதுமக்கள் மத்தியில் பேசப்பட்டு வருகிறது.
போலீசார் எச்சரித்தும், இன்னும் பல கடைகளில் பள்ளி மாணவர்களுக்கு இந்த புகையிலை பொருட்களை தங்கு தடையின்றி தாராளமாக விற்பனை செய்து வருகிறார்கள். இதனால் பல மாணவர்கள் சிகரெட் மற்றும் புகையிலை பொருட்களை கையில் வைத்து திரிவதை கண்கூடாக பார்க்க முடிகிறது. போதை தரும் மது உட்பட புகையிலை பொருட்கள் அனைத்தும் தடுத்து நிறுத்தப்பட வேண்டும் என்பதே சமூக ஆர்வலர்களின் எதிர்பார்ப்பு..பள்ளி மாணவர்களின் எதிர்காலத்தை பாதுகாக்குமா தமிழக அரசு! பள்ளிகல்வித்துறை..!
செய்தியாளர் அபுபக்கர்சித்திக்




You must be logged in to post a comment.