17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » இராமநாதபுரத்தில் போதையில் மயங்கி கிடந்தவர் மீது நள்ளிரவில் பெட்ரோல் ஊற்றி எரிப்பு ஆட்டோ டிரைவர் கைது

இராமநாதபுரத்தில் போதையில் மயங்கி கிடந்தவர் மீது நள்ளிரவில் பெட்ரோல் ஊற்றி எரிப்பு ஆட்டோ டிரைவர் கைது

எழுதியவர்: mohan November 29, 2019, 12:34 pm

இராமநாதபுரம் பாலசுப்ரமணியசுவாமி கோயில் தெரு ராமச்சந்திரன் மகன் ஜெய்சங்கர், 35. சாயக்கார ஊருணி தெரு ஆட்டோ டிரைவர் சுரேஷ், 41.இருவருக்கும் இடையே முன் விரோதம் இருந்து வருகிறது. இந்நிலையில் கேணிக்கரை சந்திப்பு அருகே உள்ள மதுக்கடை முன் ஜெய்சங்கர் மது போதையில் நேற்று இரவு படுத்துக் கிடந்தார். அப்போது அங்கு வந்த சுரேஷ் தனது ஆட்டோவில் இருந்த பெட்ரோலை எடுத்து ஜெய்சங்கர் மீது ஊற்றி தீ வைத்து வைத்து ஆட்டோவில் தப்பிச் சென்றார். படுகாயமடைந்த ஜெய்சங்கர் 108 ஆம்புலன்ஸ் மூலம் இராமநாதபுரம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு. சிகிச்சை பலனின்றி  காலை இறந்தார். சுரேஷை கேணிக்கரை போலீசார் கைது செய்தனர்.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!