ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் பேரூராட்சி வார்டுகளில் போட்டியிட அமமுக., வினர் விருப்ப விருப்ப மனு அளித்தனர். மண்டபம் பேரூராட்சி வார்டு 10ல் போட்டியிட மண்டபம் ஒன்றிய துணை செயலர் எம்.ஏ.பக்கர், வார்டு 12ல் போட்டியிட க.முரளி ஆகியோர் தங்கள் விருப்ப மனுவை தலைமை நிலைய செயலரும், திருப்பத்தூர் தொகுதி சட்ட மன்ற முன்னாள் உறுப்பினருமான கே.கே. உமாதேவன், மாவட்ட செயலர் வ.து.ந.ஆனந்திடம் கொடுத்தனர்.மாநில அமைப்பு செயலர்கள் வ.து.நடராஜன் (முன்னாள் அமைச்சர்), ஜி.முனியசாமி (சேமிப்பு கிடங்கு வாரிய முன்னாள் தலைவர்),மண்டபம் ஒன்றிய செயலர் ஜி.எம்.ஸ்டாலின் ஜெயச்சந்திரன் ஆகியோர் உடனிருந்தனர்.
மண்டபம் பேரூராட்சி தேர்தல் அமமுக விருப்ப மனு
எழுதியவர்: mohan November 29, 2019, 12:14 pm




You must be logged in to post a comment.