இராமநாதபுரம் மாவட்ட மக்கள் பாதை சார்பாக கமுதி ஒன்றியம் கோவில்லாங்குளம் கிராம அரசு மேல்நிலைப் பள்ளியில் மரக்கன்றுகள் நடப்பட்டது.கமுதி பேரூராட்சி பொறுப்பாளர் யோககுமார் வரவேற்பு செய்தார்.மேலும் மரக்கன்றுகள் வளர்க்கும் முறை, மரத்தின் பயன்கள், இயற்கை உரம் தயாரிக்கும் முறை ஆகியவற்றை கமுதி தாய்மண் திட்ட பொறுப்பாளர் குப்புராஜ் மாணவர்களுக்கு எடுத்துரைத்தார்.
மேலும் சமுக மாற்றத்திற்கான பணிகளில் மாணவர்களின் பங்களிப்பு அவசியம் என்பதை வலியுறுத்தி துபாய் மக்கள் பாதை பொறுப்பாளர் சைவதுரை எடுத்துரைத்தார்.கமுதி ஒன்றிய பொறுப்பாளர் யோகேஸ்வரன் மாணவர்களுக்கு தமிழ் மொழியின் சிறப்பு, அரசியல் விழிப்புணர்வு ஆகியவை பற்றி எடுத்துரைத்து சிறப்புரை ஆற்றினார்.இந்நிகழ்வில் மக்கள் பாதை தோழர்கள் சூரிய பிரகாசு,வல்லரசு,சந்தோஷ் மற்றும் ஆசிரியர்கள், மாணவர்கள் பலர் கலந்து கொண்டனர்.







You must be logged in to post a comment.