18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » பள்ளிவாசலுக்கு சொந்தமான திருமண மண்டபம் , கொடி கம்பத்தில் அரசியல் கட்சி கொடி வரையப் பட்டுள்ளதால் முஸ்ஸீம்கள் அதிர்ச்சி

பள்ளிவாசலுக்கு சொந்தமான திருமண மண்டபம் , கொடி கம்பத்தில் அரசியல் கட்சி கொடி வரையப் பட்டுள்ளதால் முஸ்ஸீம்கள் அதிர்ச்சி

எழுதியவர்: mohan November 29, 2019, 10:18 am

திண்டுக்கல் மாவட்டம் சித்தையன் கோட்டை பள்ளிவாசல் அருகே முஸ்லீம் மக்களுக்கு சொந்தமான திருமண மண்டபம் உள்ளது. அதன் சுவற்றில் வெளிப்பகுதியில் குறிப்பிட்ட அரசியல் கட்சியின் வண்ணத்துடன் கொடி வரையப்பட்டிப்பதோடு அருகாமையில் உள்ள கொடிமரத்திலும் அதே வண்ணத்தில் ஒரு சில விசமிகளால் பூசப்பட்டிருக்கிறது.

அந்த மண்டபத்தில் வருடம் ஒருமுறை முன்னாள் மறைந்த முஸ்லீம் பெரியார் ஒருவரின் நினைவு கூறும் வகையில் இரண்டு நாள் விழா கொண்டாடும் வகையில் நடத்துவதை அந்த பகுதியில் முஸ்லீம்கள் வழக்கமாக கொண்டுள்ளனா்.  அதற்கான ஆயத்தப்பனிகள் நடைபெற்று வரும் நிலையில் அதை சீர்குலைக்கும் வகையில் விசமிகளால் இரவு அரசியல் கட்சி வண்ணம் பூசப்பட்டிருப்பது கண்டு அப்பகுதிவாழ் முஸ்லீம்கள் மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.  தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!