தருமபுரி மாவட்டம் பாலக்கோடு திரௌபதியம்மன் கோவில் வளாகத்தில் தமிழ் நாடு நாடகம் மற்றும் நாட்டுப்புற கலைஞர்கள் நலசங்கம் பாலக்கோடு ஒன்றியத்தின் சார்பில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில் முக்கிய தீர்மாணங்கள் நிறைவேற்ற பட்டதில் அனைத்து கலைஞர்களுக்கும் அடையாள அட்டை, அரசு
வழங்கும் நிதியுதவி, வீடு மற்றும் நிலம் இல்லாதவர்களுக்கு இலவச வீட்டுமனை பட்டா, 50வயதை கடந்த ஆண் கலைஞர்களுக்கும், 45வயதை கடந்த பெண் கலைஞர்களுக்கும் ஓய்வூதியம், தற்போது வழங்கக்கூடிய ஓய்வூதிய திட்டத்தில் இரண்டாயிரத்தில் இருந்து 5ஆயிரமாக உயர்த்தி வழங்கவும், இலவச பஸ்பாஸ், நடிகர் சங்கத்தில் நாட்டுப்புற கலைஞர்களை இணைப்பது மற்றும் கிராம நிர்வாக அதிகாரியிடம் சிறந்த விருது பெற்ற கலைஞர்களுக்கு மாவட்டம் சார்பில் பரிந்துரை செய்வது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.இதில் மாநில துணை தலைவர் சின்னசாமி, மாநில கௌரவ ஆலோசகர் சிங்காரவேலன், மாநில அமைப்பு செயலாளர் சாரதி, மாநில துணை அமைப்பாளர் செந்தில் மற்றும் முருகசாமி, முனியப்பன், சின்னசாமி என 100க்கும் மேற்பட்ட கலைஞர்கள் கலந்து கொண்டனர்.
பாலக்கோட்டில் தமிழ்நாடு நாடகம் மற்றும் நாட்டுப்புற கலைஞர்கள் நலசங்கம் சார்பில் ஆலோசனை கூட்டம்
எழுதியவர்: mohan November 29, 2019, 10:00 am




You must be logged in to post a comment.