18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » கீழக்கரை செய்திகள் » செய்திகள் » மாவட்ட செய்திகள் » மாநில அளவிளான UCMAS CHAMPION போட்டியில் பெருமை சேர்த்த கீழக்கரை பியர்ல் மெட்ரிக் பள்ளி மாணவி..

மாநில அளவிளான UCMAS CHAMPION போட்டியில் பெருமை சேர்த்த கீழக்கரை பியர்ல் மெட்ரிக் பள்ளி மாணவி..

எழுதியவர்: ஆசிரியர் November 28, 2019, 9:45 pm

மாநில அளவிளான UCMAS CHAMPION போட்டியில் பெருமை சேர்த்த கீழக்கரை பியர்ல் மெட்ரிக் பள்ளி மாணவி தமிழ்நாடு மாநில அளவில் CHAMPION பட்டம் வென்று சாதனை படைத்துள்ளார்.

கடந்த 16 ம் தேதி சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் தமிழ்நாடு மாநில அளவிளான அபாகஸ் போட்டி நடைபெற்றது ஆயிரக்கணக்கான மாணவ மாணவியர் பங்கேற்ற இப்போட்டியில் கீழக்கரை பியர்ல் மெட்ரிக் பள்ளியில் பயிலும் கச்சு மரைக்கா தெருவைச் சார்ந்த பக்ருதீன் அலி அகமது மகளுமான நான்காம் வகுப்பு மாணவி B. FATHIMA FARHA, Z2 பிரிவில் கீழக்கரையில் முதன்முறையாக சாம்பியன் கோப்பையை வென்று சாதனை படைத்துள்ளார்.

இதன் மூலம் 21 ஆண்டு UCMAS கீழக்கரை வரலாற்றில் தமிழ்நாடு மாநில அளவில் முதன்முதலில் CHAMPION இடத்தை வென்று கோப்பையை கைப்பற்றிய முதல் மாணவி என்ற பெறுமையை பெற்றுள்ளார். இந்த வெற்றியை பாராட்டும் வகையில் ப்யர்ல் மெட்ரிக் பள்ளி ஆசிரய பெருமக்கள் மற்றும் நிர்வாகிகள் வாழ்த்துக்களை தெரிவித்தனர்.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!