18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » பாம்பன் கடலில் தவறி விழுந்து மீனவர் மாயம் தேடும் பணியில் இந்திய கடலோரக் காவல், விமானப்படை வீரர்கள்

பாம்பன் கடலில் தவறி விழுந்து மீனவர் மாயம் தேடும் பணியில் இந்திய கடலோரக் காவல், விமானப்படை வீரர்கள்

எழுதியவர்: mohan November 28, 2019, 6:35 pm

ராமநாதபுரம் மாவட்டம் சாயல்குடி அருகே கன்னிராஜபுரம் ரோச் மாநகரத்தைச் சேர்ந்த ராபின் மகன் ரோஸ்டன், 23. இவர் பாம்பன் அந்தோணியார் கோயில் பகுதியில் வசிக்கிறார்.இன்று28.11.19 காலை இவர் நாட்டுப்படகில் தொழிலுக்குச் செல்ல மீன்பிடி சாதனங்களை சிறிய படகில் ஏற்றிக்கொண்டு பாம்பன் தென் கடற்கரையில் இருந்து கிளம்பினார். அப்போது படகில் இருந்து தவறி விழுந்து கடலில் மாயமானார். மாயமான ரோஸ்டனை சக மீனவர்கள் நீண்ட நேரம் தேடியும் கண்டுபிடிக்க இயலவில்லை. மீனவர்கள் தகவல்படி இந்திய கடலோரக் காவல் படை ஹோவர் கிராப்ட், விமானப்படை ஹெலிகாப்டர் ரோஸ்டனை தேடும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!