ஐக்கிய நாட்டு சபையின் மனித உரிமை ஆணையம் நவம்பர் 25 ஆம் தேதி பெண்கள் மீதான வன்முறை எதிர்ப்பு தினமாக அறிவித்துள்ளது. இதனை உலக அளவிலான பெண்கள் அமைப்புகள், பெண்கள் மீதான வன்முறை எதிர்ப்பு தினமாக நவம்பர் 25 ஆம் தேதி முதல் டிசம்பர் 10ஆம் தேதி வரை அகில உலக மனித உரிமை நாள் வரையிலான 16 நாட்களை
வன்முறையில்லா ஒளிமயமான எதிர்காலம்” என்ற கோஷத்தோடு உலக அளவில் பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்றனர். இதன் தொடர்ச்சியாக திருவண்ணாமலை அண்ணா சாலை முன்பு நடைபெற்ற மௌன போராட்டத்தில் 50க்கும் மேற்பட்ட பெண்கள், பெண்கள் மீதான வன்முறை எதிர்ப்பு வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தி மௌனப் போராட்டம் நடத்தினர். பின்னர் பெண் உரிமையும் மனித உரிமை மதிக்கப்பட வேண்டும், பெண்கள் மற்றும் குழந்தைகள் மீதான பாலியல் வன்முறைகள் கொலைகள் நடப்பதற்கு முக்கிய காரணமாக இருக்கும் கஞ்சா, குட்கா ,பான் மசாலா மற்றும் அரசு நடத்தும் டாஸ்மாக் மதுபானக் கடைகளை முற்றிலும் தடைசெய்யப்பட வேண்டும், மத்திய, மாநில அரசுகள் பூரண மதுவிலக்கை அமல்படுத்த வேண்டும், அரசு மருத்துவமனைகளில் குடி மற்றும் போதைப் பொருட்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கு தனி சிகிச்சை பிரிவு அமைக்க வேண்டும், மத்திய மாநில பெண்கள் ஆணையத்திற்கு அதிக அதிகாரங்கள் வழங்கப்பட வேண்டும் போன்ற கோரிக்கைகள் அடங்கிய துண்டு பிரசுரங்களை பொதுமக்களுக்கு விநியோகித்தனர். இப்போராட்டத்தில் தமிழ்நாடு பெண்கள் இணைப்புக் குழு மாநில பொருளாளர் ஜோஸ்வின்ராஜா, திருவண்ணாமலை மாவட்ட ஒருங்கிணைப்பாளர் சுமதி உட்பட 50க்கும் மேற்பட்ட பெண்கள் கலந்து கொண்டனர்.
திருவண்ணாமலையில் சர்வதேச பெண்கள் வன்முறை ஒழிப்பு தினத்தை முன்னிட்டு கறுப்பாடை மௌன போராட்டம்.
எழுதியவர்: mohan November 28, 2019, 6:04 pm




You must be logged in to post a comment.