18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » இராமநாதபுரம் உள்ளாட்சி தேர்தல் தமாகா விருப்ப மனு

இராமநாதபுரம் உள்ளாட்சி தேர்தல் தமாகா விருப்ப மனு

எழுதியவர்: mohan November 28, 2019, 3:19 pm

இராமநாதபுரம் மாவட்ட உள்ளாட்சி அமைப்புகளில் தமாகா சார்பில் போட்டியிட விரும்புவோர் மாவட்ட நிர்வாகிகளிடம் விருப்பமனு அளித்தனர். கிழக்கு மாவட்ட தலைவர் வி.என்.நாகேஸ்வரன் தலைமை வகித்தார். சுகுமார், மாவட்டசேவா தள முன்னாள் தலைவர் தினேஷ்பாபு, மாவட்ட துணை தலைவர் பி.வி. கணேசன்,ராமேஸ்வரம் நகர் தலைவர் ராமகிருஷ்ணன், மாவட்ட பொருளாளர் பாலகிருஷ்ணன்,ஆகியோர் முன்னிலை வகித்தனர். ராமேஸ்வரம் நகராட்சி வார்டுகளில் போட்டியிட என்.டி.முகேஷ் குமார் , ராமகிருஷ்ணன்,ராமநாதபுரம் நகராட்சி வார்டுகளில் போட்டியிட ராஜேஸ்வரன், தினேஷ் பாபு, மண்டபம் ஊராட்சி ஒன்றிய வார்டுகளில் போட்டியிட ராஜேஸ்வரன், சத்தீஸ்வரன், பாலகிருஷ்ணன், திருவாடானை ஊராட்சி ஒன்றிய வார்டுகளில் போட்டியிட அப்பாவு, மதன்குமார், ஆர்.எஸ்.மங்கலம் ஊராட்சி ஒன்றிய வார்டுகளில் போட்டியிட ஸ்டாலின், ராஜதுரை, கீழக்கரை நகராட்சி வார்டில் போட்டியிட கார்த்திகேயன் உள்ளிட்டோர் மற்றும் நகராட்சி வார்டுகள், ஊராட்சி தலைவர்கள், ஒன்றிய வார்டுகளில் போட்டியிட விருப்ப மனு அளித்தனர்.நிர்வாகிகள் ராமகிருஷ்ணன், என்.பால்ராஜ், ஏ.தர்மா, முகேஷ்குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!