இராமநாதபுரம் மாவட்டம் சாயல்குடி நெய்தல் வட்டார களஞ்சியத்தின் 20வது ஆண்டு பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. 300க்கும் மேற்பட்ட களஞ்சிய சுய உதவிக் குழுக்களிலிருந்து 750க்கும் மேற்பட்ட குழு நிர்வாகிகள் பங்கேற்றனர். வட்டாரத் தலைவர் பெத்தனாச்சியம்மாள் வரவேற்றார். இப்பொதுக் குழுவில் வட்டார ஆண்டு அறிக்கை மற்றும் எதிர்கால ஆண்டுத் திட்டம் குறித்து வட்டார ஒருங்கிணைப்பாளர் பிரசாத் குமார் அறிக்கை வாசித்தார். பொதுக்குழு அங்கீகரித்தது. வட்டார தணிக்கை
அறிக்கை மற்றும் அடுத்த ஆண்டிற்கான பட்ஜெட்டை வட்டார கணக்காளர் சாத்தையா சமர்பித்தார். இதனை பொதுக் குழு முழுமனதாக ஏற்றது. வட்டாரத் தலைவர்கள், பணியாளர்கள் அறிமுகம், அனுபவ பகிர்வுக்கு பின் தலைமை செயல் அதிகாரி பெ.ராஜன், புதுகை வட்டார ஒருங்கிணைப்பாளர் பழனிக்குமார்,சிகரம் வட்டார தலைவர்கள் பாப்பா, சண்முக வள்ளி ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். வட்டார செயலாளர் அபிராமி வட்டார புதிய குழுக்களை அமைத்து வளர்ச்சி சேவைகளை விரிவாக கொண்டு செல்ல இலக்குகள் குறித்து வட்டார பணியாளர்களுக்கு வழிகாட்டினார். வட்டார பொருளாளர் சி. அபிராமி நன்றி தெரிவித்தார்.
சாயல்குடி நெய்தல் வட்டார களஞ்சிய பொதுக்குழு கூட்டம்
எழுதியவர்: mohan November 28, 2019, 2:09 pm




You must be logged in to post a comment.