திருவண்ணாமலை மத்திய பேருந்து நிலையத்தில் 5 புதிய குளிர்சாதனப் பேருந்துகள் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் கொடியசைத்து துவக்கி வைத்தார்.இந்த நிகழ்ச்சியில் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேவூர்
ராமச்சந்திரன் மாவட்ட ஆட்சித் தலைவர் கந்தசாமி கட்சி தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.புதிய பேருந்துகளை கொடியசைத்து துவக்கி வைத்ததும் அமைச்சர்கள் பேருந்தில் பயணம் செய்தனர்.பின்னர் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட கட்சி தொண்டர்கள் மற்றும் பொதுமக்களுக்கு இனிப்புகளை வழங்கினர்.திருவண்ணாமலை மத்திய பேருந்து நிலையத்தில் இருந்து நான்கு புதிய குளிர்சாதன பேருந்துகள் திருவண்ணாமலை பெங்களூர் வழித்தடத்திலும் ஒரு புதிய குளிர்சாதன பேருந்து திருவண்ணாமலை அடையாறு வழித்தடத்தில் இயக்கப்பட்ட உள்ளன.
திருவண்ணாமலை பேருந்து நிலையத்தில் 5 புதிய குளிர்சாதனப் பேருந்துகள் அமைச்சர் செங்கோட்டையன் கொடியசைத்து துவக்கி வைத்தார்
எழுதியவர்: mohan November 28, 2019, 1:37 pm




You must be logged in to post a comment.