திண்டுக்கல் மாவட்டம் வத்தலக்குண்டுவில் கொடைக்கானலில் செல்லும் சுற்றுலா பயணிகள் தங்கி செல்ல வசதியாக நூற்றுக்கும் மேற்பட்ட தங்கும் விடுதிகள் உள்ளன. இந்த தங்கும் விடுதிகளில் சமீபகாலமாக கொடைக்கானல் சுற்றுலா பயணிகளை குறி வைத்து விபச்சாரம் கொடிகட்டி பறந்து வருகின்றது .அதில் இன்று 4 பெண்கள் உள்பட 10 பேர் கைது செய்யப்பட்டனர்.இந்த ஒரு வாரத்தில் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளரிடம் அரிதமாக புகார்கள் சென்றுள்ளதையடுத்து மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் சக்திவேல் நிலக்கோட்டை காவல்துறை துணை
கண்காணிப்பாளர் பாலகுமரன் ஆகியோர் உத்தரவின் பேரில் வத்தலக்குண்டுஇன்ஸ்பெக்டர் பிச்சைபாண்டியன் தலைமையில்
போலீசார் வத்தலக்குண்டு பஸ்நிலையம் அருகே உள்ள ஒரு தனியார் விடுதியில் சோதனை செய்து வருகின்றனர் அப்போது விபச்சாரத்தில் ஈடுபட்டிருந்த பெரம்பலூர் அகதிகள் முகாமைச் சேர்ந்தவசந்தகுமார் 39, கொடைக்கானல் மலை பள்ளங்கியைச் சேர்ந்த சண்முகநாதன் 52, வத்தலக்குண்டு அருகே கட்டக்காமன்பட்டியைச் சேர்ந்த மலர்மன்னன் 40, கொடைக்கானல் நாயுடுபுரத்தைச் சோ்ந்த செல்வம் 34 ஆகியோர்பெண்களிடம் நான்கு விடுதிகளில் தனித்தனியே விபச்சாரத்தில் ஈடுபட்டிருந்தைக் கண்டுஆண்கள் நான்கு பேரையும் உடன் இருந்த பெண்கள் நான்கு பேரையும் மொத்தஎட்டு பேரை போலீசார் கைது செய்தனர்.பின்னர் விடுதியை குத்தகைக்குஎடுத்து விபச்சாரம் நடத்தி வந்த வத்தலக்குண்டு அருகே விராலிப்பட்டியைச்சேர்ந்த காமராஜ் 55, புரோக்கராக செயல்பட்ட வத்தலக்குண்டு அருகேபெருமாள்கோவில்பட்டியைச் சேர்ந்த ஜோதிபாசு 42 ஆகியோரும் கைதுசெய்யப்பட்டனர்.மேலும் கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பு தான் நெடுஞ்சாலையில் உள்ள ஒருதங்கும் விடுதியில் விபச்சாரத்தில் ஈடுபட்ட நான்கு பெண்கள் உள்பட எட்டு
பேர் கைது செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது. இதுபற்றி வத்தலக்குண்டுஇன்ஸ்பெக்டர் பிச்சைபாண்டியன் கூறுகையில் அனைத்து தங்கும் விடுதிகளும்தொடர்ந்து சோதனை செய்யப்படும் அதனைத் தொடர்ந்து கஞ்சா விற்பனை சோதனை நடத்தஉள்ளோம் என்றார்.
நிலக்கோட்டை தாலுகாசெய்தியாளர் ம.ராஜா




You must be logged in to post a comment.