தனுஷ்கோடி அருகே உள்ள சவுக்கு தோப்பு பகுதியில் கஞ்சா விற்பனை செய்யப்படுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதன்படி போலீசார் நேற்றிரவு அந்த சவுக்கு காட்டு
பகுதியில் ரோந்து மேற்கொண்டனர். அங்கு சந்தேகத்தின் பேரில் சுற்றித் திரிந்த முதியவரை பிடித்தனர். விசாரணையில் தேனி மாவட்டம் உத்தமபாளையம் நாகராஜன் 63 என தெரிந்தது. தேனியில் இருந்து மொத்தமாக கஞ்சா வாங்கி வந்து அதை காகித பொட்டலங்களாக மடித்து அந்த பகுதியில் உள்ள வாலிபர்கள் மற்றும் மீனவர்களுக்கு சில்லரை வியாபாரம் செய்து வந்தது தெரியவந்தது.நாகராஜனிடம் இருந்து 1கிலோ கஞ்சா பொட்டலங்களை பறிமுதல் செய்த தனுஷ்கோடி போலீசார் அவரை கைது செய்தனர். கஞ்சா உள்பட இதர போதை பொருட்கள் விற்பனை, பதுக்கல், பயன்பாடு குறித்து தகவல் அளிப்பவருக்கு ரூ. 5 ஆயிரம் சன்மானம் வழங்கப்படும் என ராமநாதபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வீ.வருண்குமார் நேற்று முன் தினம் அறிவித்தார். இந்நிலையில் தனுஷ்கோடி பகுதியில் கஞ்சா விற்பனை குறித்த தகவல்படி நாகராஜன் கைது செய்யப்பட்டுள்ளார்.
தனுஷ்கோடியில் சவுக்கு காட்டில் கஞ்சா விற்பனை முதியவர் கைது
எழுதியவர்: mohan November 28, 2019, 11:23 am




You must be logged in to post a comment.