திருச்சி KK.நகரை சேர்ந்த சுப்பையா மகன் ரமேஷ்குமார். அதே பகுதியை சேர்ந்த சந்தானம் மகன் சுந்தர்ராஜ் மற்றும் அழகர்சாமி என்ற ராஜா உட்பட ஒன்பது பேர் இன்பி கேலக்ஸி மார்க்கெட் இந்தியா பிரைவேட் லிமிடெட் என்னும் நிறுவனத்தை நடத்தி வருகின்றனர். இவர்கள் எம்எல்எம் மற்றும் ரியல் எஸ்டேட் உட்பட பல்வேறு தொழில்களை செய்து வருகின்றனர்.இவர்கள் 2014 இல்
இருந்து விருதுநகர் மாவட்டம் மம்சா புரத்தைச் சேர்ந்த நாராயணசாமி மகன் கோவிந்தராஜ் என்பவரிடம் ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள 13,750 பட்டாசு பெட்டிகளை வாங்கியுள்ளனர். வாங்கிய பட்டாசு பெட்டிகளுக்கு மதுரை தமிழ்நாடு ஓட்டலில் வைத்து பணம் பரிமாற்றம் நடைபெற்றது.அப்போது 4 கோடியே 63 லட்சம் ரூபாய் கொடுக்காமல் ஏமாற்றியது தெரிய வருவருகிறது.இது குறித்து கோவிந்தராஜ் கொடுத்த புகாரின் பேரில்மதுரை பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் 4 பிரிவில் வழக்கு பதிவுசெய்து ரமேஷ்குமார், சுந்தர்ராஜ் ஆகிய இருவரையும் கைது செய்தனர்.மேலும்இச்சம்பவத்தில் தொடர்புடைய 7 பேரை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.
செய்தியாளர். வி காளமேகம் மதுரை மாவட்டம்




You must be logged in to post a comment.