மதுரை மாவட்டம் உசிலம்பட்டி கோட்டாட்சியர் அலுவலகத்திற்கு
தினந்தோறும் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் வந்துசெல்கின்றனர். இந்த அலுவலக வளாகத்தில்தான் கிளை சிறைச்சாலை, நிலஅளவை அலுவலகம், பொதுப்பணித்துறை அலுவலகம் உள்ளது. மேலும் இந்த கோட்டாட்சியர் அலுவலகம் அருகில் மாவட்ட தலைமை மருத்துவமணை, தனியார் பள்ளிகள், ஆசிரியர் பயிற்சி பள்ளிகள், வங்கிகள் என பொதுமக்கள் அதிகம் வந்து செல்லக்கூடிய இடமாக இந்த பகுதி அமைந்துள்ளது. இந்நிலையில் நகராட்சி சார்பில் கடந்த 1 மாதத்திற்கு முன்பு குடிநீர் இணைப்புக்காக பள்ளம் தோண்டப்பட்டது. ஆனால் குடிநீர்; இணைப்பை சரிசெய்த பின்னரும் இதுவரை இந்த பள்ளத்தை மூட எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. கோட்டாட்சியர் அலுவலகத்திற்கு பெரும்பாலும் வயதானவர்களே வந்து செல்வதால் விபத்து ஏற்படும் என அபாயம் உள்ளது. மேலும் இப்பள்ளம் சுமார் 6 அடி உயரத்திற்கு இருப்பதால் சிறுவர்கள் விழுந்தால் வெளியே தெரியாது.உடனே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உயிர்பலி ஏற்படுவதற்கு முன்பு பள்ளத்தை மூட நடவடிக்கை எடுக்க வேண்டுமென கோரிக்கை விடுத்துள்ளனர்.
உசிலம்பட்டி கோட்டாட்சியர் அலுவலகம் முன்பு உள்ள ஆபத்தான பள்ளத்தை மூட நடவடிக்கை எடுக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை
எழுதியவர்: mohan November 27, 2019, 4:43 pm




You must be logged in to post a comment.