18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » சத்திரக்குடி அருகே போலீஸ்காரர் தாயார் மர்ம மரணம்?

சத்திரக்குடி அருகே போலீஸ்காரர் தாயார் மர்ம மரணம்?

எழுதியவர்: mohan November 27, 2019, 3:22 pm

இராமநாதபுரம் மாவட்டம் சத்திக்குடி அருகே எட்டி வயல் கிராமத்தைச் சேர்ந்தவர் வேலுச்சாமி. இவரது மனைவி தெய்வானை, 50. இவர்களுக்கு 3 மகன்கள் உள்ளனர். இவர்களுக்கு வினோத் காம்ப்ளி, இளையராஜா, வெற்றி மாறன் என 3 மகன்கள், சித்ரா என்ற மகளும் உள்ளனர். திருமணமான சித்ரா செங்க படையில் குடும்பத்துடன் வசித்து வருகிறார். வினோத் காம்ப்ளி ஏர்வாடி போலீசில் தனிப்பிரிவு ஏட்டாக பணியாற்றி வருகிறார். இரண்டாவது மகன் வெளிநாட்டிலும், இளையமகன் கோவையிலும் வேலை செய்கின்றனர். இந்நிலையில், தெய்வானை இன்று அதிகாலை, தன் சொந்த நிலத்தில் விவசாய பணிக்குச் சென்றார். சிறிது நேரத்தில் அவர் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். தெய்வானை கழுத்தில் அணிந்திருந்த நகைக்காக அவரை யாரேனும் கொலை செய்திருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர். சத்திரக்குடி போலீசார் தெய்வானை உடலை கைப்பற்றி கொலைக்கான காரணம் குறித்து தீவிரமாக விசாரித்து வருகின்றனர். இதனால் எட்டி வயல் பகுதியில் பரபரப்பு நிலவுகிறது.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!