திருவண்ணாமலை,வேங்கிக்கால் பகுதியில் உள்ள செல்வா நகரில் வசிப்பவர் சந்திரன்,மணிமேகலை தம்பதியினர்.சந்திரன் மதுரை வேலைவாய்ப்பு அலுவலகத்தின் துணை இயக்குநராக
பணியாற்றி வருகின்றார்.மணிமேகலை கலசப்பாக்கம் பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வருகின்றார்.இந்நிலையில் இருவரும் வீட்டில் இல்லாத நிலையில் நேற்று இரவு சந்திரன் வீட்டின் முன்பக்க கதவினை உடைத்து மர்ம நபர்கள் உள்ளே நுழைந்துள்ளனர்.வீட்டில் இருந்த பீரோவினை உடைத்து உள்ளே இருந்த 25 சவரன் தங்க நகைகள் மற்றும் 65 ஆயிரம் ரொக்கம் ஆகியவற்றினை கொள்ளையர்கள் கொள்ளையடித்து சென்றுள்ளனர்.இந்த கொள்ளை சம்பவம் குறித்து அருகில் இருந்த வீட்டினர் அளித்த புகாரினையடுத்து அங்கு வந்த திருவண்ணாமலை கிழக்கு காவல் நிலைய காவல்துறையிர் கொள்ளை சம்பவம் குறித்து தீவிர விசாரனை மேற்க்கொண்டுள்ளனர்.இந்த கொள்ளை சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்ப்படுத்தியுள்ளது.
வேலை வாய்ப்பு அலுவலக துணை இயக்குனர் வீட்டின் பூட்டை உடைத்து 25 சவரன் தங்க நகைகள் மற்றும் 65 ரொக்கம் கொள்ளை.
எழுதியவர்: mohan November 27, 2019, 12:37 pm




You must be logged in to post a comment.