17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » நிலக்கோட்டை அருகே பெண்கள் மீதான வன்முறைக்கு எதிரான தினம் அனுசரிக்கப்பட்டது

நிலக்கோட்டை அருகே பெண்கள் மீதான வன்முறைக்கு எதிரான தினம் அனுசரிக்கப்பட்டது

எழுதியவர்: mohan November 27, 2019, 12:11 pm

திண்டுக்கல் மாவட்டம் , நிலக்கோட்டை அருகே வீலிநாயக்கன்பட்டியில சர்வதேச பெண்கள் மீதான வன்முறைக்கு எதிரான தினத்தை முன்னிட்டு சைல்டு வாய்ஸ் அமைப்பு இயக்குனர் அண்ணாதுரை தலைமையில் எதிரான தினம் நடத்தப்பட்டது.,, இந்நிகழ்ச்சியை சைல்டு வாய்ஸ் சார்பாக வீலிநாயக்கன்பட்டி மற்றும் சாண்டலாபுரம், பொட்டி செட்டி பட்டி சமுதாய நலக்குழு இணைந்து நடத்தினர் . இந்நிகழ்ச்சியை அன்னை தெரசா பல்கலைக்கழக பெண்கள் ஆய்வு மைய இயக்குநர் மீனா பிரியதர்சினி கருத்துரை வழங்கினார் . இறுதியில் குழந்தை திருமணத்தை தடுத்து நிறுத்தவும் பாலியல் பலாத்காரம் வன்முறை எதிராக கடும் நடவடிக்கை எடுக்க வேண்டியும் பெண் குழந்தை கொத்தடிமையாக அமர்த்தப்படுவதை தடுக்க வேண்டியும் குடும்ப வன்முறை எதிரான சட்டத்தை தீவிரமாக அமுல் படுத்த வேண்டும் என உறுதி மொழி எடுத்து கொண்டார்கள் இந்நிகழ்ச்சிக்கு ராமஜெயம் வரவேற்புரை நிகழ்த்தினார் பவானி நன்றி கூறினார்.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!