18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » பாலக்கோடு அருகே தண்டுகாரஹள்ளி கிராமத்தில் தொடர் மர்ம திருட்டு மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க கோரிக்கை

பாலக்கோடு அருகே தண்டுகாரஹள்ளி கிராமத்தில் தொடர் மர்ம திருட்டு மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க கோரிக்கை

எழுதியவர்: mohan November 27, 2019, 12:06 pm

தருமபுரி மாவட்டம் பாலக்கோடு அருகே தண்டுகாரஹள்ளி கிராமத்தில் சுமார் 500க்கும் மேற்பட்ட வீடுகளில் இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட குடும்பங்கள் வாழ்ந்து வருகின்றனர். இக்கிராமத்தில் பல்வேறு தரப்பினரும் இருந்து வருகின்றனர்.தண்டுகாரஹள்ளி கிராமத்தில் அதிக பொதுமக்கள் வாழ்வதை சாதகமாக பயன்படுத்தி போதை வஸ்துக்கள், சாரயம், மதுபாட்டில் விற்பனை என பல்வேறு குற்ற சம்பவங்கள் நடைபெறுவது தொடர்கதையாக உள்ளது.இதனால் கிராமத்தில் உள்ள சில நபர்கள் பல்வேறு குற்ற செயல்களில் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர்.

கடந்த 25ம் தேதி இரவு மாரிமுத்து மகன் சுந்தரம்(50) என்பவரின் வீட்டின் முன்பு நிறுத்தப்பட்ட இருசக்கர வாகனம் மர்ம நபர்கள் திருடி சென்றுள்ளார்.இது குறித்து பாலக்கோடு காவல்நிலையத்தில் புகார் மனு அளிக்கப்பட்டது. இதுபோன்று மேலும் திருட்டு சம்பவங்கள் நடைபெறாமல் இருக்க பாலக்கோடு போலீசார் துரித நடவடிக்கை எடுக்கவும் தொடர்ந்து தடுக்கவும் திருட்டு சம்பவங்கள் மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கிராம பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!