முதல்படை வீடான திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் நேற்று முதல் செவ்வாய்கிழமை தோறும் பக்தர்களுக்கு
இலவச பால் வழங்கும் திட்டம் மீண்டும் துவங்கியது.சுப்பிரமணியசுவாமி கோயிலில் மூலவர் கரத்திலுள்ள தங்க வேலுக்கு அபிஷேகம் செய்யப்படும் பால் தினமும் பக்தர்களுக்கு இலவசமாக வழங்கப்படுகிறது. இதை தவிர்த்து செவ்வாய் கிழமைதோறும் காலை முதல் இரவு வரை காய்ச்சிய பாலுடன் சர்க்கரை கலந்து இலவசமாக வழங்கப்படுகிறது. இந்த நடைமுறை கடந்த சில ஆண்டுகளாக நடைமுறையிலத இல்லாமல் இருந்தது. பக்தர்களின் கோரிக்கையை ஏற்று ஒவ்வொரு செவ்வாய்க்கிழமையும் பக்தர்களுக்கு காலை முதல் மாலை வரை காய்ச்சிய பால் பிரசாதமாக எவர் சில்வர் டம்ளரில் வழஙகப்படுகிறது.
வி காளமேகம் மதுரை மாவட்டம்




You must be logged in to post a comment.