17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » இராமநாதபுரம் மாணவ சகோதரர்களுக்கு கோவையில் பாராட்டு

இராமநாதபுரம் மாணவ சகோதரர்களுக்கு கோவையில் பாராட்டு

எழுதியவர்: mohan November 27, 2019, 10:07 am

தேசிய குழந்தைகள் தினத்தை முன்னிட்டு தேசிய, மாநில அளவிலான விளையாட்டு, அறிவியல் விழிப்புணர்வு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவியருக்கு பரிசு மற்றும் கல்வி உதவித் தொகை வழங்கும் விழா கோவை சவரிபாளையம் அன்னை வேளான் கன்னி மெட்ரிக்., மேல்நிலைப்பள்ளியில் நடந்தது. பள்ளி செயலாளர் விவின் ஆன்ட்ரூஸ் வரவேற்றார். மாவட்ட கல்வி அலுவலர் கீதா முன்னிலை வகித்தார். மாநில ஆதிதிராவிடர் நலக்குழு உறுப்பினர் செல்வக்குமார் வாழ்த்துரை வழங்கினார். விழாவில், இராமநாதபுரம் மாவட்டம் மாவட்டம் ஆர்.எஸ்.மங்கலம் ஒன்றியம் உப்பூர் அருகே கூத்தன்வயல் கா.பாலமுருகன், இவரது மகன்கள் திருவெற்றியூர் புனித நோபர்ட் ஆர்சி மெட்ரிக்., உயர்நிலைப்பள்ளி 9 ஆம் வகுப்பு மாணவர்நிலநவ சிகன், ஏழாம் வகுப்பு மாணவர் திகர்பூவன் ஆகியோர் நாசா விண்கலத்தில் தங்கள் பெயரை பொறித்தனர். இவர்களுக்கு ப.சங்கரன் ஐஏஎஸ் அகாடமி சார்பில் தமிழக பாஜக., பொதுச்செயலர் வானதி சீனிவாசன் பரிசு மற்றும் கல்வி உதவித்தொகை வழங்கி பாராட்டினார். பள்ளி தாளாளர் விக்டர் சகாயராஜ் நன்றி கூறினார்.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!