18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » ராமேஸ்வரம் கடலில் தத்தளித்த மீனவர்களை மீட்ட சக மீனவர்களுக்கு ராமநாதபுரம் ஆட்சியர் பாராட்டு

ராமேஸ்வரம் கடலில் தத்தளித்த மீனவர்களை மீட்ட சக மீனவர்களுக்கு ராமநாதபுரம் ஆட்சியர் பாராட்டு

எழுதியவர்: mohan November 27, 2019, 9:54 am

இராமேஸ்வரத்தில் இருந்து அலெக்ஸ் என்பவரது விசைப்படகில் அலெக்ஸ் பாண்டியன், நாகுரான், கோபி,குமார் ஆகியோர் நவ.25 ல் மீன் பிடிக்கச் சென்றனர்.இவர்கள் சென்ற படகு எதிர்பாரா விதமாக கவிழ்ந்து 4 பேரும் கடலில் தத்தளித்தனர். வயர்லஸ் கருவி மூலம் சற்று தொலைவில் மீன்பிடியில் ஈடுபட்டிருந்த சக மீனவர்களுக்கு தகவல் தெரிவித்தனர். இதனையடுத்தஅந்த 4 பேரையும் பத்திரமாக மீட்டசக மீனவர்கள் அருள் வெனிஷ், கென்னடி, செல்வம், செல்வராஜ் ஆகியோரின் வீர செயலை மாவட்ட ஆட்சியர் வீரராகவ ராவ் பாராட்டி கேடயம் வழங்கினார்.மீன்வளத்துறை துணை இயக்குநர் பிரபாவதி, உதவி இயக்குநர் திருநாவுக்கரசு, வட்டாட்சியர் அப்துல் ஜபார் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!