மதுரை மாவட்டம் திருமங்கலத்தில் நகைக்காக மூதாட்டி கொலை. மதுரை அடுத்த திருமங்கலம் அன்னகா முதோட்டம் பகுதியை சேர்ந்த காவேரி வயது 55. இதே பகுதியில் இவர் பெட்டிக்கடை நடத்தி வருகிறார். இவருக்கு ஒரு வளர்ப்பு மகன் உள்ளார்.
இந்த நிலையில் 26/11/2019 சுமார் 9 15 மணி அளவில் இவர் பெட்டி கடைக்கு எதிரே வசிக்கும் காதர் இஷா ஒலி என்பவர் முட்டை வாங்க வருவது போல் கடைக்குள் வந்து கையில் கையுறை அணிந்து காவிரியின் கழுத்திலுள்ள 5 பவுன் பறிக்க முயற்சி செய்துள்ளான். அப்போது அவனின் கையில் வைத்திருந்த சிறிய கத்தியால் அவர் கழுத்து மற்றும் பின் கையிலும் குத்தியதில் நிலைகுலைந்த காவேரி கூச்சலிடுவது கண்ட அக்கம் பக்கத்தினர் திரண்டுள்ளனர்.
இதைக்கண்டு அவன் வீட்டினுள் ஒளிந்துகொண்டுள்ளான். பின் நடந்த விவரத்தை காவேரியிடம் கேட்டு அவரை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். பின் காதர் இஷாஒலி தேடியபோது வீட்டின் ஒளிந்துகொண்டு கேஸ் சிலின்டரை துறந்துவிட்டு தீயை பற்ற வைத்துள்ளான். இதை கண்ட பொதுமக்கள் காவல் துறைக்கும், தீயணைப்பு துறைக்கு தகவல் கொடுத்து தீயணைப்பு துறை துறையினர் எரிவாயு நெருப்பை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.
பின் அவனை பொதுமக்கள் காவல்துறையிடம் ஒப்படைத்தனர். இந்த நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட காவேரி சிகிச்சை பலனின்றி திருமங்கலம் அரசு மருத்துவமனையில் மரணமடைந்தார். இதுகுறித்து திருமங்கலம் டவுன் போலீசார் விசாரணை செய்து வருகிறார்கள்.
செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்










You must be logged in to post a comment.