17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » கீழக்கரை செய்திகள் » செய்திகள் » மாவட்ட செய்திகள் » ஹமீதியா தொடக்கப் பள்ளியில் முன்னாள் மாணவர்கள் சார்பாக கணிணி வழங்கும் நிகழ்வு…

ஹமீதியா தொடக்கப் பள்ளியில் முன்னாள் மாணவர்கள் சார்பாக கணிணி வழங்கும் நிகழ்வு…

எழுதியவர்: ஆசிரியர் November 27, 2019, 2:30 am

ஹமீதியா தொடக்கப் பள்ளியில் இன்று (26/11/2019) முன்னாள் மாணவர்களால் வழங்கப் பட்ட கணினிகளுடன் புதிய அறையில் புதுப்பொலிவுடன் மீண்டும் கணினி வகுப்பு தொடங்கப்பட்டது. இதில் வடக்கு தெரு ஜமாத் தலைவர்  K. S. R . ரத்தின முஹம்மது தலைமை தாங்கினார். M. M. சுல்தான் கபீர் அவர்கள் வரவேற்புரை வழங்கினார். ஆசிரியை M. குர்ரத்து நிஸா ஆசிரியை நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கினார்.

பள்ளி தாளாளர் P. S. L. H. சதக் இல்யாஸ் மற்றும் பைத்துல்மாலின் செயலாளர் முகைதீன் தம்பி முன்னிலை வகித்து வாழ்த்துரை வழங்கினார்.  காதர் சுல்தான், அ. மு. சுல்தான், முஹம்மது சதக் இன்ஜினியரிங் கல்லூரி விரிவுரையாளர்  ஆஷிஃப் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.  A.ஹமீதுநிசா தலைமையாசிரியை நன்றியுரை வழங்கினார்கள். இவ்விழாவில் ஏராளமான முன்னாள் மாணவர்களும், பெற்றோர்களும் கலந்து கொண்டனர்.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!