17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » டெல்லியில் முக்கிய கோரிக்கைகளை வலியுறுத்தி மாற்றுத்திறனாளிகள் போராட்டம்

டெல்லியில் முக்கிய கோரிக்கைகளை வலியுறுத்தி மாற்றுத்திறனாளிகள் போராட்டம்

எழுதியவர்: mohan November 26, 2019, 7:45 pm

மாற்றுத்திறனாளிகளுக்கு உதவித்தொகையை நாடு முழுவதும் 3000ஆக உயர்த்த வேண்டும், கல்வியில் 5 சதவீத இடஒதுக்கீடு வழங்க வேண்டும், வேலைவாய்ப்பில் 4 சதவீத இடஒதுக்கீடு வழங்க வேண்டும், விரும்புகிற அனைவருக்கும் மோட்டார் பொருத்திய பைக் வழங்க வேண்டும், மாற்றுத்திறனாளிகள் உரிமைச் சட்டம் 2016ஐ நாடு முழுவதும் உடனடியாக அமல்படுத்த வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி டெல்லியில் உள்ள ஜந்தர் மந்தர் பகுதியில் ஊனமுற்றோருக்கான தேசிய மேடையின் சார்பில் நாடு முழுவதும் இருந்து ஆயிரக்கணக்கான மாற்றுத்திறனாளிகளை திரட்டி போராட்டம் நடைபெற்று வருகிறது.

காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை உள்ள மாற்றுத்திறனாளிகளை திரட்டி நடைபெறும் போராட்டத்தில் திண்டுக்கல் மாவட்டத்தில் இருந்து தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கத்தின் சார்பில் 40க்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளிகள் பங்கேற்றனர்.சங்கத்தின் மாவட்டச் செயலாளர் பகத்சிங் தலைமையில், மாவட்ட பொருளாளர் காளீஸ்வரி முன்னிலையில் திண்டுக்கல் மாவட்டம் முழுவதும் இருந்து 40க்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளிகள் இந்த போராட்டத்தில் பங்கேற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

செய்தியாளர் அபுபக்கர்சித்திக்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!