17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாநில செய்திகள் » கீழக்கரையில் வாக்காளர் அட்டை பெயர் சேர்த்தல், திருத்தல் விண்ணப்ப முகாம்..

கீழக்கரையில் வாக்காளர் அட்டை பெயர் சேர்த்தல், திருத்தல் விண்ணப்ப முகாம்..

எழுதியவர்: ஆசிரியர் November 26, 2019, 7:44 pm

கீழக்கரையில் இஸ்லாமிய கல்வி சங்கம் சார்பாக வாக்காளர் அட்டை பெயர் சேர்த்தல், திருத்தல் விண்ணப்ப முகாமை வருகிற 28/11/19 (வியாழன் கிழமை) முதல் 30/11/19 (சனிக் கிழமை) வரை மாலை 05:00 மணி முதல் இரவு 07:30 வரை வள்ளல் சீதக்காதி சாலையில் அமைந்துள்ள அல் மத்ரஸத்துர் ராழியா அலுவலகத்தில் நடைபெற இருக்கிறது.

இந்த சேவைக்கு கீழே  குறிப்பிடப்பட்டுள்ள தேவையான ஆவணங்கள் (நகல்) அனைத்தையும் கண்டிப்பாக கொண்டு வரவேண்டும். மேலும் இவை இணையத்தில் (online) செய்யப்படும் விண்ணப்பம் என்பதால் அனைத்து ஆவணங்களையும் கையில் வைத்திருப்பது அவசியம். இந்த முகாமில்

1. முதல் முறை பெயர் சேர்த்தல் 2. தொகுதி மாற்ற விண்ணபித்தல் 3. வாக்காளர் பெயர் நீக்கம் 4. வாக்காளர் விவரங்கள் திருத்தம் 5. வாக்காளர் முகவரி திருத்தம்

ஆகிய விண்ணப்ப பணிகள் மேற்கொள்ளப்படும். இச்சேவைக்கு தேவையான ஆவணங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

முதல் முறை பெயர் சேர்த்தல் / தொகுதி மாற்ற விண்ணபித்தல் : 1. PASSPORT SIZE PHOTO. 2. AGE PROOF / ADHAAR CARD. 3. ADDRESS PROOF.

வாக்காளர் பெயர் நீக்கம் : VOTERS ID

வாக்காளர் விவரங்கள் திருத்தம் : 1. VOTERS ID 2. PASS PORT SIZE PHOTO 3. ADHAAR CARD

வாக்காளர் முகவரி திருத்தம்

1. VOTERS ID 2. PASS PORT SIZE PHOTO 3. ADHAAR CARD 4. ADDRESS PROOF

இம்முகாம் பற்றிய கூடுதல் விபரங்களுக்கு 9629141842 / 8883542737 என்ற எண்களை தொடர்பு கொள்ளலாம்.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!