மதுரையை அடுத்த துவரிமான் இரட்டைவாய்க்கால் மாலை நண்பர்களுடன் நரசிம்மன்குளிக்க சென்றுள்ளார். வைகை ஆற்றில் குளித்துக் கொண்டிருக்கும் போது திடீரென மாயமானார். நண்பர்கள் உடனடியாக தீயணைப்பு துறையினருக்கு தகவல் கொடுக்கவே தீயணைப்புத்துறையினர் நிலை அலுவலர் வெங்கடேசன் தலைமையிலான குழுவினர் விரைந்து உடலை தேடும் பணியில் ஈடுபட்டனர். எனினும் இரவு நேரம் ஆனதால் மீண்டும் காலை 6 மணிக்கு தேடத் தொடங்கிய தீயணைப்பு துறையினர் இன்று மாலை 4/30 மணி அளவில் துவரிமான் அருகே சேற்றில் சிக்கிய உடலை தீயணைப்பு துறையினர் கடும் போராட்டத்திற்கு பிறகு மீட்டனர். பின் உடலை மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளார்கள்.
செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்




You must be logged in to post a comment.