18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » நெல்லையில் இந்திய இறையாண்மை பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி

நெல்லையில் இந்திய இறையாண்மை பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி

எழுதியவர்: mohan November 26, 2019, 5:46 pm

இந்தியா குடியரசு ஆகிய தினத்தை முன்னிட்டு இந்திய இறையாண்மை பற்றிய விழிப்புணர்வு உறுதிமொழி நிகழ்ச்சி நெல்லை காவல்துறை மற்றும் காவலர் குரல் பத்திரிகை இணைந்து நெல்லை சாஃப்டர் மேனிலைப் பள்ளியில் நடைபெற்றது.நிகழ்ச்சியில் பள்ளி தாளாளர் வரவேற்று பேசினார். NCC ,NSS மாணவர்கள் கலந்து கொண்டனர்.

சிறப்பு விருந்தினர்களாக நெல்லை காவல்துறை சார்பில் காவல் உதவி ஆணையாளர் திரு.சேகர் ( சமூகநீதி மற்றும் மனித உரிமைகள் பிரிவு ) ..மற்றும் சிறப்பு உதவி ஆய்வாளர்கள் திரு.பாலசுப்பிரமணியன் திரு.மனோகரன் திரு.பிரம்மநாயகம் ஆகியோர் கலந்து கொண்டனர். மேலும் காவலர் குரல் சார்பில் பன்னீர் செல்வம் ( ஆசிரியர் ) திரு.ஜபருல்லா மற்றும் செல்வகுமார் ஆகியோர் கலந்து கொண்டனர்.இதில் இந்திய இறையாண்மையை பாதுகாப்பது குறித்து பள்ளி மாணவ மாணவிகளிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கில் இறையாண்மை பாதுகாப்பு உறுதிமொழி ஏற்கப்பட்டது.

செய்தியாளர் அபுபக்கர்சித்திக்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!