18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » கடலில் மூழ்கியது அரிச்சல்முனை தனுஷ்கோடி செல்ல தடை

கடலில் மூழ்கியது அரிச்சல்முனை தனுஷ்கோடி செல்ல தடை

எழுதியவர்: mohan November 26, 2019, 5:39 pm

ராமேஸ்வரம் (அக்னி தீர்த்தம்), தனுஷ்கோடியில் (சேது தீர்த்தம்) புனித நீராடுவதால் உடல், மனம் தூய்மை அடைந்து பாவங்கள் நீங்கி புண்ணியம் கிடைக்கும் என்ற நம்பிக்கையில் தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து செல்கின்றனர்.இந்நிலையில் தனுஷ்கோடி அரிச்சல் முனை கடற்பகுதியில் நேற்று நள்ளிரவு திடீரென ஏற்பட்ட கடல் கொந்தளிப்பால் அப்பகுதியில் கடல் அரிப்பு ஏற்பட்டு அரிச்சல்முனையின் பெரும்பாலான பகுதி மூழ்கி காணப்படுகிறது. தற்போது அரிச்சல்முனை பகுதி மூழ்க துவங்கி சாலையோர தடுப்புச் சுவர் கடல் நீரில் அரிப்பு ஏற்பட்டு சேதமடைந்து வருகிறது. இதனால் அரிச்சல்முனை கடற்பகுதிக்கு சுற்றுலா பயணிகள், பக்தர்கள் செல்வதற்கு இன்று முதல் தடை விதிக்கப்பட்டது.

தனுஷ்கோடி வரும் சுற்றுலா பயணிகள் கம்பிபாடு பகுதியில் தடுத்து நிறுத்தபடுகின்றனர். ராமேஸ்வரம் மெரைன் காவல் ஆய்வாளர் கனகராஜ், சார்பு ஆய்வாளர் ராஜ்குமார் தலைமையில் 30 க்கும் மேற்பட்ட போலீசார் வாகனங்களில் ஒலி பெருக்கி மூலம் அரிச்சல்முனை பகுதிக்கு செல்ல வேண்டாம் எனவும் , கடலில் சுற்றுலா பயணிகள் குளிக்க வேண்டாம் எனவும் எச்சரிக்கை விடுத்து வருகின்றனர். கடற்கரை ஓரங்களில் விளையாடுவோரை கண்காணிக்க 10 க்கும் மேற்பட்டடோர் தொடர் ரோந்து பணியில் ஈடுபடுத்தப்பட்டுனர்.இதனால் தனுஷ்கோடி வரும் சுற்றுலா பயணிகள், ‘ பக்தர்கள் மிகுந்த ஏமாற்றம் அடைந்துள்ளனர்.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!