தூத்துக்குடியில் சர்வதேச தொடு சிலம்பம் போட்டி நடைபெற்றது. இதில் 200 க்கும் மேற்பட்ட வீரர்/வீராங்கனைகள் கலந்துகொண்டனர். நேரு நினைவு கல்லூரியின் சார்பாக 4 மாணவ /மாணவிகள் பங்கு பெற்றனர். கல்லூரியின் தலைவர் பொன்.பாலசுப்ரமணியன் நல்லாசியுடனும் முதல்வர் அ. இரா. பொன்பெரியசாமி துணையாலும், கல்லூரி ஒருங்கிணைப்பாளர் மீனாட்சிசுந்தரம் ஆதவராவலும் இயற்பியல் துறை உதவிப்பேராசிரியர் ரமேஷ் வழிகாட்டுதலின் பெயரிலும் மற்றும் தாவரவியல் துறை உதவிப்பேராசிரியர் முனைவர். ப. மனோகரன் பயிற்சியாலும் மாணவ/மாணவிகள் தங்களின் திறமையை சிறப்பாக வெளிப்படுத்தினர். இந்த தொடு சிலம்பம் போட்டி எடை பிரிவு வாரியாக நடைபெற்றது.
இதில் 51 முதல் 55 வரை எடை பிரிவில் இளம்அறிவியல் கணிப்பொறி அறிவியல் துறை முதலாம் ஆண்டு மாணவர் R.பூபாலன் முதலிடம் பெற்றார், மற்றும் 46 முதல் 50 எடை பிரிவில் இளம்அறிவியல் இயற்பியல் துறை மூன்றாம் ஆண்டு மாணவி P.சக்திப்ரியா மூன்றாம் இடம் பெற்றார். 56 முதல் 60 வரை உள்ள எடை பிரிவில் இளம்அறிவியல் விலங்கியல் துறை முதலாம் ஆண்டு மாணவர் T.சந்துரு மூன்றாம் இடம் பெற்றார். இது மட்டுமின்றி ஒட்டு மொத்த சிறந்த அணிக்கான விருதினையும் பெற்றுள்ளது.










You must be logged in to post a comment.