17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » விவசாயிகளுக்கு பயிர்காப்பீட்டு தொகை முறையாக வழங்க வலியுறுத்தி தமிழ் விவசாயிகள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்.

விவசாயிகளுக்கு பயிர்காப்பீட்டு தொகை முறையாக வழங்க வலியுறுத்தி தமிழ் விவசாயிகள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்.

எழுதியவர்: mohan November 26, 2019, 12:50 pm

பயிர்காப்பீட்டு தொகை முறையாக வழங்க வலியுறுத்தி தமிழ் விவசாயிகள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. தனியார் நிறுவங்களில் விற்பனையாகும் போலியான உரங்கள், பூச்சி மருந்துகளை கண்டுபிடித்து நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி கோவில்பட்டியில் தமிழ் விவசாயிகள் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.திரளாக விவசாயிகள் கலந்து கொண்டனர்.2017-18-ம் ஆண்டில் விடுபட்ட விவசாயிகளுக்கு நிலுவையில் உள்ள பயிர் காப்பீட்டை காலதாமதம் இல்லாமல் உடனே வழங்க வேண்டும். 2018-19க்கான பயிர் காப்பீட்டை மாவட்டத்தில் உள்ள அனைத்து விவசாயிகளுக்கும் ஒரே மாதிரியான தொகையை பாகுபாடின்றி முறையாக காலதாமதமின்றி வழங்க வேண்டும். பயிர் விதைப்பு செய்தவுடன் காப்பீடு செய்ய தமிழக அரசு அறிவிக்க வேண்டும்.

உரம், பூச்சி மருந்துகள் அனைத்தும் வேளாண்மை துறை மூலமாக மானிய விலையில் வழங்க வேண்டும். தனியார் நிறுவங்களில் விற்பனையாகும் போலியான உரங்கள், பூச்சி மருந்துகளை கண்டுபிடித்து நடவடிக்கை எடுக்க வேண்டும். தமிழக அரசு விவசாயிகளுக்கு விதைப்பு காலத்தில் வட்டியில்லா கடனாக ரூ.2 லட்சம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோவில்பட்டி பயணியர் விடுதி முன்பு தமிழ் விவசாயிகள் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.இந்த ஆர்ப்பாட்டத்தில் தமிழ் விவசாயிகள் சங்க மாநில தலைவர் ஓ.ஏ.நாராயணசாமி தலைமை வகித்தார். மாநில துணைத்தலைவர் ஏ.நம்பிராஜன், மாவட்டத் தலைவர்கள் டி.எஸ்.நடராஜன், வெள்ளத்துரை, அவைத்தலைவர் ஜி.வெங்கடசாமி உள்ளிட்ட ஏராளமானோர் கலந்துகொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர்.

செய்தியாளர் அபுபக்கர்சித்திக்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!