புதிதாக உதயமான தென்காசி மாவட்டத்தில் முதன் முதலாக மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் சுப்பராஜா மஹால் திருமண மண்டபத்தில் 25.11.19 திங்கள் காலை நடைபெற்றது.மாவட்ட ஆட்சியர் அருண் சுந்தர் தயாளன் தலைமை தாங்கி பொதுமக்களிடம் இருந்து மனுக்களை பெற்றுக் கொண்டார். மாவட்ட வருவாய் அலுவலர் கல்பனா, தென்காசி உதவி கலெக்டர் பழனிகுமார் மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.கூட்டத்தில் மனு கொடுப்பதற்காக பொதுமக்கள், அரசியல் அமைப்பினர் பெருந்திரளாக குவிந்தனர். மொத்தம் 1,200 மனுக்கள் பெறப்பட்டன.
தென்காசி மாவட்டத்தில் கல்வி, பொது சுகாதாரம், ஊரக வளர்ச்சி முன்னுரிமை கொடுப்பதாகவும், அண்டை மாநிலமான கேரளாவில் இருந்து வரும் கழிவுகளை கட்டுபடுத்த நடவடிக்கை எடுக்கப்படுவதாகவும் மாவட்ட ஆட்சியர் அருண் சுந்தர் தயாளன் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.தென்காசியின் புதிய மாவட்டத்தின் ஆட்சியர் அருண் சுந்தர் தயாளன் ஊடக செய்தியாளர்களை சந்தித்து கூறுகையில் ஒவ்வொரு திங்கள்கிழமை தோறும் மக்கள் குறை தீர்க்கும் கூட்டம் நடைபெறும்.இதனை பொது மக்கள் பயன்படுத்தும் மாறு கேட்டுக்கொண்டார்.
தற்காலிகமாக மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அமைக்க 5.87 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது என்றார்.தொடர்ந்து பேசிய அவர் கல்வி,பொது சுகாதாரம், ஊரக வளர்ச்சிக்கு முன்னுரிமை அளிப்பதாகவும்,167 பணியிடங்கள் தற்போது ஒதுக்கீடு செய்யப்பட்டதாகவும்,அண்டை மாநிலத்தில் இருந்து கேரள கழிவுகள் மாவட்ட எல்லையில் கொட்டப்பட்டு வருவதாகவும் அதற்கான குருஞ் செய்திகள் வருவதையொட்டி அதனை கண்காணித்து தடுத்து நிறுத்தி நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.இந்த சந்திப்பின் போது மாவட்ட வருவாய் அலுவலர் கல்பனா மற்றும் அரசு அதிகாரிகள் உடன் இருந்தனர்.
செய்தியாளர் அபுபக்கர்சித்திக்




You must be logged in to post a comment.