18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » உரிய ஆவணம் இன்றி இயக்கப்பட்ட ஷேர் ஆட்டோக்கள் பறிமுதல்

உரிய ஆவணம் இன்றி இயக்கப்பட்ட ஷேர் ஆட்டோக்கள் பறிமுதல்

எழுதியவர்: mohan November 26, 2019, 11:38 am

மதுரையில் போக்குவரத்து காவல்துறை வட்டார போக்குவரத்து அலுவலர் மற்றும் அரசு நகரப் பேருந்து போக்குவரத்து அலுவலர் இணைந்து ஷேர் ஆட்டோக்கள் மீது அதிரடி நடவடிக்கை தொடர்ந்து நடக்குமா பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் எதிர்பார்ப்பு. மதுரை கோரிப்பாளையத்தில் திடீரென்று மூன்று துறையினர் இணைந்து பேருந்து நிறுத்தத்தில்உள்ள ஷேர் ஆட்டோக்களையும் மற்றும் அதிக அளவு ஆட்களை ஏற்றி வரும் போதிய ஆவணம் இல்லாத ஷேர் ஆட்டோ கலையும் சுமார் 25-க்கும் மேற்பட்ட சோதனை செய்ததில் சுமார் 15-க்கும் மேற்பட்ட உரிய ஆவணம் இன்றி இயக்கப்பட்ட ஷேர் ஆட்டோக்கள் பறிமுதல் செய்து மதுரை புதுக்குளம் பேருந்து பணிமனை எதிரே உள்ள வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்துக்கு வட்டார போக்குவரத்து அலுவலர்கள் கொண்டு செல்லப்பட்டது. பொதுமக்களின் எதிர்பார்ப்பு.. இதுபோன்ற அதிரடி நடவடிக்கை வாரம் அல்லது மாதம் இரு முறையாவது நடத்தப்பட வேண்டும் அப்பொழுதுதான் மதுரை மாநகரில் ஷேர் ஆட்டோக்கள் விபத்துக்கள் குறையும் எனவும் உயிரிழப்புகளும் தவிர்க்கப் படும் எனவும் சமூக ஆர்வலர்களும் பொதுமக்களும் கருத்து தெரிவித்தனா்.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!